ilakkiyainfo

ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாட்டால் பெரும் பதற்றம்

ரோஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்: பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாட்டால் பெரும் பதற்றம்
September 27
07:21 2017

கல்­கிசை பொலிஸ் பிரிவில் ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த மியன்­மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களை அங்­கி­ருந்து உட­ன­டி­யாக வெளியேற்றி நாடு கடத்­து­மாறு பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று அவ்­வீட்டை சுற்றி வளைத்து ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இதனால் அப்­ப­குதி எங்கும் பெரும் பதற்­ற­மான சூழ் நிலை உரு­வா­ன­துடன் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய பொலிஸார் அவர்­களை தமது பொறுப்பில் எடுத்­தனர்.

இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய அவர்­களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலை­யத்தில் வைத்­துள்­ள­தா­கவும், நேற்­றைய இந்த சம்­பவம் தொடர்பில் கல்­கிசை நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்­பித்­துள்­ள­துடன் சம்­பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்டத்தரணி ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

நேற்று காலையும், மாலையும் குறித்த வீட்டை தேரர்கள் தலை­மை­யி­லான குழு­வினர் சுற்­றி­வ­ளைத்து கலகம் விளை­விக்கும் வண்ணம் நடந்­து­கொண்ட நிலையில் ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். இதனால் கல்­கிசை -, இரத்­ம­லானை வீதியில் அதிக வாகன நெரி­சலும் ஏற்பட்­ட­துடன் பிர­தே­சத்தில் பதற்­றமும் அதி­க­ரித்­தது.

3d541244556eb6bbb5678a35cf83fad21f71c04bஇந்த நிலையில் ஸ்தலத்­துக்கு உட­ன­டி­யாக கல்­கிசை பொலிஸார் அழைக்­கப்­பட்டு நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்கப்பட்­டது.

நேற்று காலை 10.15 மணி­ய­ளவில் பிக்­குகள் தலை­மையில் குறித்த ரோஹிங்யா முஸ்­லிகள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த வீட்­டுக்கு வந்துள்ள குழு­வினர் வீட்டின் முன்­பாக, அவர்­களை வெளி­யேற்­று­மாறு கோரி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இதன்­போது, அவர்கள் வீட்­டுக்குள் நுழை­யவும் முற்­பட்ட நிலையில் ஸ்தலத்­துக்கு கல்­கிசை பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இதனை­ய­டுத்து பாட­சா­லைக்கு சென்­றி­ருந்த அகதிச் சிறு­வர்கள் ஓரி­ருவர் தவிர ஏனை­யோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்­கிசை பொலிஸ் நிலை­யத்­துக்கு பொலிஸார் அழைத்து சென்­றனர்.

அக­தி­களின் பாது­காப்பை உறுதி செய்ய இவ்­வாறு அவர்­களை பொலிஸார் பொறுப்­பேற்­ற­தாக கல்­கிசை பிராந்­திய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரி­வித்தார்.

இந் நிலையில் பாட­சா­லையில் இருந்த சிறு­வர்­களும் பின்னர் பாது­காப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்து செல்­லப்­பட்­டுள்­ளனர்.

அதன்­பின்னர் நிலை­மையை ஆராய்ந்த பொலிஸார் அக­தி­களை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்­பகல் வேளையில் மீள குடியமர்த்தினர்.

எனினும் மீளவும் மாலை 5.30 மணி­ய­ளவில் அப்­ப­கு­தியில் கூடிய சுமார் 70பேர் வரை­யி­லான பிக்­குகள் உள்­ளிட்ட கடும்­போக்கு பெரும்­பான்மை இனத்­த­வர்கள் கல­கத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­ட­துடன்.அவர்கள் வீட்­டினுள் அத்­து­மீறி பிர­வே­சிக்க முயற்­சித்­துள்­ளனர்.

இதனால் அப்­ப­கு­தியில் கடும் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இதற்கு மேல­தி­க­மாக அவர்கள் பிர­தான பாதையில் வாகன போக்­கு­வ­ரத்­துக்கு இடைஞ்ல் ஏற்­படும் வண்­ணமும் ஆர்ப்­பாட்டம் செய்­தனர்.

இந் நிலையில் மாலை வேளையில் மீளவும் அக­தி­களை பாது­காக்க பொலிஸார் கடும் பிர­யத்­த­னத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

இதன்­போது இரு பொலி­ஸா­ருக்கு சிறு காயங்கள் ஏற்­பட்­டன. இந் நிலையில் நிலைமை மோச­ம­டை­வதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்யா அக­தி­களை தமது பொறுப்பில் எடுத்து, ட்ரக் வண்­டியில் பொலிஸ் பாது­காப்­புடன் கல்­கிசை பொலிஸ் நிலையம் அழைத்து சென்­றனர்.

இந் நிலையில் நேற்று இரவு முழு­வதும் அந்த அக­திகள் பொலிஸ்­பா­து­காப்பின் கீழ் கல்­கிசை பொலிஸ் நிலை­யத்தில் தங்கவைக்கப்பட்டிருந்­தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்யா முஸ்­லிம்கள் காங்­கே­சன்­துறை கடற்­ப­ரப்பில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இந் நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்­லிம்கள் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அவர்­களை மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அதன் பின்­ன­ரான வழக்கு விசா­ர­ணை­களின் போது, ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம், குறித்த ரோஹிங்யா முஸ்­லிம்­களை பொறுப்­பேற்­றது. $மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில், ஐ.நா. அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் சார்பில் அவர்­களை வேறு நாடொன்றில் அக­தி­க­ளாக குடி­யேற்றும் வரை, மிரி­ஹான தடுப்பு முகா­முக்கு வெளியே வைத்து பரா­ம­ரிக்க அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து முஸ்லிம் எய்ட் என்ற அரச சார்­பற்ற நிறு­வ­னத்தின் அனு­ச­ர­ணையில் குறித்த 30 பேரும் இரத்­ம­லானை பகு­தியில் மூன்று மாடி வீடொன்று பெறப்­பட்டு அங்கு தங்­க­வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

இந்த 30 பேரில் இலங்­கைக்கு வந்த பின்னர் புதி­தாக ஒரு குழந்தை பிறந்­துள்ள நிலையில் தற்­போது மொத்­த­மாக 31 பேர் அங்கு தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­களில் 7 பெண்­களும் 16 பேர் வரையில் சிறு­வர்­க­ளு­மாவர். அவர்­களில் பலர் பிர­தே­சத்தின் பாட­சாலை ஒன்­றிலும் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் மியன்­மாரில் இருந்து தீவி­ர­வா­திகள் அக­திகள் எனும் போர்­வையில் நாட்­டுக்குள் வந்­துள்­ள­தா­கவும் அவர்கள் சட்ட விரோத­மாக தங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்தே கல்­கிசை பகு­தியில் உள்ள குறித்த மூன்று மாடிக் கட்­டிடம் பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.

ரோஹிங்யா முஸ்­லிம்கள் நாட்­டுக்குள் வர­வில்லை எனவும் அவர்­களை தாம் பொறுப்­பேற்கப் போவதும் இல்லை எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்த நிலையில், அப்­படி யாரும் இருந்தால் தகவல் தாருங்கள் என கோரி­ய­தா­கவும், இந்த வீட்டில் ரோஹிங்யா முஸ்­லிம்கள் உள்­ளார்கள் அவர்­களை உட­ன­டி­யாக நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் எனவும் சுற்றி வளைத்து கலகம் செய்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் கோஷம் எழுப்­பினர். இதன்­போது அவர்கள் கல­கத்தை ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்­பட்­டனர்.

எனினும் அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் அகதி அந்­தஸ்து கோரிய ஐக்­கிய நாடுகள் சபையின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ர­கத்தின் பாது­காப்பின் கீழ் இருந்­துள்­ளமை பொலிஸார் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் அவர்­களின் பாது­காப்பை பொலிஸார் உறுதி செய்ய நட­வ­டிக்கை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இது தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான முக­வ­ரகம் அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடாத்­த­வுள்­ள­துடன், இந்த பிக்­கு­களின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முணசிங்க, மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரளவின் நேரடி கட்டுப்பாட்டில் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் பிரதேசத்தின் பாதுகாப்பும் ரோஹிங்யா அகதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com