ilakkiyainfo

லண்டன் பயங்கரவாத தாக்குதல்: சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்!!: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம்

லண்டன் பயங்கரவாத தாக்குதல்: சாட்சியமளித்த யுவதியிடம் அந்தரங்கப் பகுதி முடிகள் குறித்து கேள்வி எழுப்பிய பொலிஸார்!!: ஊடகவியல் மாணவி எதிர்கொண்ட அதிர்ச்சி அனுபவம்
October 04
16:04 2017

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின்போது, மாணவ குழுவொன்றுடன் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்த கலப்பின யுவதியொருவரை விசாரித்த பொலிஸார் மிகவும் மோசமான கேள்விகளை கேட்ட விடயம் அம்பலமாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கார் ஒன்றை மக்கள் மீது மோதி நடத்திய தாக்குதலில் பாதசாரிகள் நால்வர் உயிரிழந்ததனர்.

அத்துடன் தாக்குதல்தாரியின் கத்திக் குத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

அவ்வேளையில், ஷீபீல்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கற்கை நெறியொன்றைப் பயின்று கொண்டிருந்த, மிரியம் வோல்கர் கான் எனும் இந்த யுவதி, 40 பேரடங்கிய மாணவர்கள் குழுவொன்றுடன் இணைந்து நாடாளுமன்றத்தை பார்வையிடச் சென்றிருந்தார்.

தாக்குதலை நேரில் கண்ட மிரியம் வோக்கர் கான், இது தொடர்பாக பொலிஸாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் அளித்தார். இவர் பாகிஸ்தானிய கலப்பு கொண்டவர்.

44E6FACE00000578-4937024-image-a-18_1506805307021
சில தினங்களின் பின்னர் அவரின் வீட்டுக்கு, ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் சார்பில் மேற்கு யோர்க்ஷயர் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சென்று விசாரணை நடத்தினர்.

கலப்பினத்தவரான மிரியம் வோக்கர் கான் தற்போது பிபிசியியில் பயிலுநர் ஊடகவியலாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில், மேற்படி அதிகாரிகள் அபத்தமான விசாரணைகள் குறித்த விடயங்களை அவர் பகிரங்கமாக்கியுள்ளார்.

முதலில் எனது இனத்துவ தோற்றத்தை விபரிக்குமாறு கேட்கப்பட்டபோது, இனத்துவ தோற்றம் என்றால் என்னவென்று தான் வியப்படைந்ததாகவும் உண்மையில் அவ்வாறு ஒன்று இல்லை எனவும் மிரியம் வோக்கர் கான் தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிகாரிகளின் அடுத்த கேள்வி அந்த யுவதிக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. “அதன்பின், எனது உடலிலுள்ள முடிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

எனது இடுப்புப் பகுதியிலுள்ள முடிகள் குறித்துத் தெரிவிக்குமாறு கேட்டனர். அவை வளரவிடப் பட்டுள்ளனவா, ஷேவ் செய்யப்பட்டுள்ளனவா, வெக்ஸ் செய்யப்பட்டுள்ளனவா, ட்ரிம் செய்யப்பட்டுள்ளனவா என கேட்டார்கள்.

ஒரு கட்டத்தில், சாட்சியின் வாக்குமூலத்தில் ஏன் இத்தகைய கேள்விகளைக் கேட்கிறீர்கள் என நான் அவர்களிடம் கேட்டேன்.

அப்போது, “நாம் ஒவ்வொருவரிடமும் இக் கேள்வியைக் கேட்போம்” என அதிகாரி ஒருவர் பதிலளித்தார் என மிரியம் வோக்கர் கான் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவக் குழுவில் தன்னை மாத்திரமே பொலிஸார் வீட்டுக்கு வந்து விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவக் குழுவினரை அழைத்துச் சென்ற விரிவுரையாளர் டேவிட் ஹோம்ஸும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் விவகாரம் தொடர்பாக ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவிக்கையில் மேற்படி தாக்குதலுக்கும் தனிப்பட்ட, அந்தரங்க வர்ணிப்புகளுக்கும் தொடர்பில்லை.

எனவே இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டமை தவறான ஒரு விடயம்” எனத் தெரிவித்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com