Site icon ilakkiyainfo

வட்டரக்க தேரர் மீதான தாக்குதல் சம்பவம் நாடகம்; அவரை கைது செய்ய நடவடிக்கை:அஜித் ரோஹன

வட்­ட­ரக்க விஜித்த தேரரை கடத்­திய சம்­பவம் தொடர்பில் பொலிஸார் அதி­ரடி விசா­ரணை மேற்­கொண்­டதில் குறித்த தேரர் தனது உற­வினர் ஒரு­வரை வைத்து இத்­த­கைய செயலை மேற்­கொண்­ட­தாக தெரிய வந்­துள்­ளது.

இதற்­க­மைய பொய்­யான முறைப்­பா­டொன்றை தாக்கல் செய்­த­மைக்­காக வட்­ட­ரக்க தேரரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் ஊடக பேச்­சா­ளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ரு­மான அஜித்­ரோ­ஹன தெரி­வித்தார்.

இது தொடர்பில் நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கடந்த 18 ஆம் திகதி இரவு வட்­ட­ரக விஜி­த­தே­ரரை கடத்தி சென்று தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­ட­துடன் இரு கைகளும் கால்­களும் கட்­டப்­பட்ட நிலையில் தேரர் பண்­டா­ர­க­மவில் வைத்து 19 ஆம் திகதி பண்­டா­ர­கம பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டி­ருந்தார்.

குறித்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அதி­ரடி விசா­ரணை மேற்­கொண்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் வெத­சிங்க தலை­மை­யி­லான கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் கடந்த 20 ஆம் திக­தி­யான வெள்­ளிக்­கி­ழமை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள வட்­ட­ரக்க விஜித தேர­ரிடம் வாக்கு மூலம் ஒன்றை பெற்­றுக்­கொண்­டனர்.

குறித்த வாக்கு மூலத்தில் வட்­ட­ரக விஜித தேரர்,

மாலம்பே அரங்­கல பகு­தியில் தனது உற­வி­னரின் வீட்­டில்தான் தங்­கி­யி­ருந்த தனது உற­வினர் ஒரு­வ­ருடன் மாலம்­பே­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி லொறியொன்றில் பய­ணித்த வேளை தலா­ஹேன பிர­தே­சத்தில் வைத்து மாலை 7.30 மணி­ய­ளவில் கிடைக்க பெற்ற தொலை­பேசி அழைப்­பிற்கு அமைவாக லொறி­யி­லி­ருந்து இறங்கி குறித்த அழைப்பு விடுத்த நோவா ரக வேனில் ஏறிய போது தனக்கு அழைப்பு விடுத்த நப­ருக்கு பதி­லாக இரண்டு பிக்கு­களே உள்ளே இருந்­தனர்.

அதன் பின்பு தனக்கு எதுவும் தெரி­யாது என்று தெரி­வித்­துள்ளார்.

தேரரின் வாக்கு மூலத்தை அடிப்­ப­டை­யாக வைத்து பொது இடங்கள், பெற்றோல் நிலை­யங்கள் உள்­ளிட்­ட­வற்றில் உள்ள சீ.சீ.ரிவி கெம­ரா­வி­னூ­டாக பார்வை­யிட்ட போது நோவா ரக வாக­னங்கள் அப்­ப­கு­தி­யி­னூ­டாக பய­ணிக்­க­வில்­லை­யென தெரிய வந்­தது.

இதே போன்று தேரரின் வாக்­கு­மூ­லத்தின் அமை­வாக தேரரின் தொலை­பே­சிக்கு கிடைக்­கப்­பெற்ற அழைப்­புக்­களை பரி­சோ­தித்த வேளையில் குறித்த நேரத்தில் எத்­த­கைய அழைப்­புக்­களும் கிடைக்­கப்­பெற வில்­லை­யென தெரிய வந்­தது.

இதன்­படி சீ.சீரிவி. கெம­ராவில் கடந்த 19 ஆம் திகதி அதி­காலை 2.30 மணிக்கு குறித்த பகு­தியால் லொறி செல்­ல­வில்லை அவ­ரது உற­வி­னரின் வேனோன்றே பய­ணித்­துள்­ளது. குறித்த கமரா பதி­வு­களை அவ­ரது உறவு முறை சகோ­த­ர­ரிடம் காண்­பித்த போது அவர் இதன் உண்­மை­யான சம்­ப­வத்தை குறிப்­பிட்டார்.

இதற்­க­மைய வட்­ட­ரக்க தேரரின் வேண்­டு­கோளின் பிர­கா­ரமே தான் இவ்­வாறு செய்­த­தாக அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் வட்டரக தேரர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தமை மற்றும் பொய்யான முறைப்பாடினை தாக்கல் செய்தமை தொடர்பாக வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version