Site icon ilakkiyainfo

வன்முறையே வரலாறாய்… (பகுதி – 1)

 

“அமைதி மார்கமென” அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள். M.A. Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன், படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

****

மதீனாவைச்  சேர்ந்த யூதர்கள்  இஸ்லாமை ஏற்றுக்  கொள்ளாமல் எதிர்த்த போது இறைத் தூதர் முகமது நபி யூதர்களைத் தாக்கியதுடன் மட்டுமின்றி, பானு கைனுகா மற்று நாதிர் (Banu Qaynuqa and Nadir tribes) பழங்குடிகளை மதீனாவிலிருந்து விரட்டியடித்தார்.

அவர்களது பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கப் பட்டார்கள். முகமது நபியைப் பின்பற்றி கலிஃபா உமர்  634-ஆம் ஆண்டு  ஜெருசலத்தைத் தாக்கி அழித்ததினால் உண்டாகிய பஞ்சத்தால் பல ஆயிரக் கணக்கானோர் செத்து மடிந்தார்கள்.

அதற்கு சற்று முன்னர் 634-ஆம் வருடம் நடந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் காரணமாக, காஸா நகருக்கும் சிசெராவிற்கும் (Gaza and Caesarea) இடைப்பட்ட பகுதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன், தங்களின் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகப் போராடிய பல்லாயிரக்கணக்கான ஏழை கிறிஸ்தவ, யூத மற்றும் சமேரிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மெசபடோமியா மீது 635-642-ற்கு மத்தியில் நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளால் பல கிறிஸ்தவ மடாலயங்கள் தகர்க்கப்பட்டதுடன், பல பாதிரியார்கள் கொல்லப்பட்டனர்.

அங்கே இஸ்லாமியர்களல்லாத பிற மதத்தவர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் கட்டாய மத மாற்றமும் செய்யப்பட்டனர். அதே ஆண்டுகளில் எலாம் (Elaam) என்ற ஊரிலிருந்த அத்தனை பேர்களும் இஸ்லாமியப் படைகளால் வாளுக்கு இரையாக்கப்பட்டனர்.

முகமது-பின்-காசிம் இந்தியாவில் பெற்ற முதலாவது வெற்றிக்குப் பின் நிகழ்ந்தவற்றை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களான அல்-பிலாதுரி மற்றும் முகமது அல்-குஃபி (Al-Biladuri and Mohamed Al-Kufi) போன்றவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதன்படி, பின்-காசிம் சிந்துவிலுள்ள  டிபால் நகரைக் கைப்பற்றிய பின்னர், அந் நகரிலிருந்த அத்தனை கோவில்களும் இடிக்கப்பட்டதுடன், இடைவிடாமல் தொடர்ந்து  மூன்று நாட்களுக்கு படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பலர் கைதிகளாக சிறை பிடிக்கப்படுகிறார்கள்.

பின்னர் நைரூன் என்னும் இடத்திலிருந்த கோவில்களும் இடிக்கப்பட்டு அங்கு ஒரு மசூதி நிறுவப்படுகிறது. ராவர் மற்று அஸ்கலந்தா என்ற ஊர்களில் இருந்த அத்தனை ஆண்களும் வெட்டிக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பெண்களும், குழந்தைகளும் கைப்பற்றப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள்.

அதுபோல மூல்தானில் போரிடும் வயதுடைய ஆண்கள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டு வாளுக்கு இரையாக்கப்பட்டதுடன், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்களும், பண்டிதர்களும் கைது செய்யப்பட்டு அடிமைகளாக்கப்பட்டனர்.

கலிஃபா உமர் 641-ஆம் ஆண்டு எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைக் கைப்பற்றிய பின் நிகழ்த்திய மூன்று நாள் வெறியாட்டமே பின்னாளில் நிகழ்ந்த அத்தனை இஸ்லாமிய வெற்றிகளுக்கு அடுத்து நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கலிஃபா உமரின் உத்தரவின்படி அலெக்ஸாண்ட்ரியா நகரம் இடித்து நொறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் படுகொலைகள் நடந்தேறியது.

அந்த உதாரணத்தைப் பின்பற்றி 1453-ஆம் வருடம் சுல்தான் முகமது கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியபின் அதன் தெருக்களில் தென்பட்ட அத்தனை ஆண், பெண், குழந்தைகளைப் படுகொலை செய்தான். அதன் காரணமாக கான்ஸ்டாண்டிநோபிளின் சரிவான தெருக்களில் ஓடிய ரத்தம் ஆற்றில் கலந்து சென்றதாக குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.

அமீர் தைமூர் அல்லது டாமெர்லென் (Tamerlane) டிசம்பர் 1399-ஆம் வருடம் இந்தியாவின் டெல்லியில் காஃபிர்களின் மேல் தொடுத்த ஜிகாதின் போது, ஏறக்குறைய ஒரு இலட்சம் இந்திய காஃபிர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள்.

அலெக்ஸாண்ட்ரியா நகரில் கலிஃபா உமர் நிகழ்த்திய  வெற்யாட்டத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பிற பகுதி எகிப்தியர்கள், இஸ்லாமியப் படைகளுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரணடைந்தனர்.

அல்-கரடாவி (Al-Qaradawi) எகிப்தை வெல்ல வெறும் 8000 இஸ்லாமியப் படைகளே போதுமானதாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். அதே சமயம் இப்ன்-வராக் (Ibn-Warraq), இஸ்லாமியப் படைகள் ஃபய்யும் நகருக்கு அருகிலுல்ல பெஹ்னஸ்ஸா என்னும் நகரைக் கைப்பற்றிய இஸ்லாமியர்கள் அங்கிருந்த அத்தனை பேர்களையும் கொலை செய்ததாகக் கூறுகிறார்.

அவர்கள் கைது செய்யப்பட்டவர்களாக இருந்தாலும், சரணடைந்தவர்களாக இருந்தாலும், வயதானவரகவோ அல்லது இளம் பெண்ணாகவோ இருந்தாலும் அதனைக் கணக்கில் கொள்ளாமல் வகை தொகையின்றி அவர்களைக் கொன்றதாக எழுதுகிறார் இப்ன்-வராக். அதே நிலை ஃபய்யும் நகருக்கும் அதனருகே இருந்த அபாய்ட் நகருக்கும் சிறிது காலம் கழித்து ஏற்பட்டது.

ஆர்மீனியாவின் மொத்த அஸ்ஸீரிய மக்களும் வாள் முனையில் எவ்வாறு இஸ்லாமிற்கு மாறும்படி செய்யப்பட்டார்கள் என்பதை ஆர்மீனிய வரலாற்று ஏடுகள் எழுதி வைத்திருக்கின்றன.

ஆர்மீனியாவிலிருக்கும் யூச்சைட்டா என்ற பகுதி மக்களை அராபியர்கள் எவ்வாறு கொன்றனர் என்ற தகவல்களை இப்ன்-வராக் மிக விளக்கமாக எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்.

அதைப் போலவே டிரொன் என்ற ஆர்மினிய நகரில் நடந்த அட்டூழியங்களைப் பற்றியும், 642-643 இல் ட்வின் நகரில் நடந்த படுகொலைகள் சொல்லில் அடங்காதவை எனச் சொல்லுகிறார் வராக்.


இவ்வாறாக இஸ்லாமியர்கள் தங்களின் படையெடுப்புகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் “அமைதியையும், நீதியையும்” நிலை நாட்டினார்கள். அவர்களால் பிடிக்கப்பட்ட நாடுகளை ஆண்ட அரசர்கள் இஸ்லாமியக் கோட்பாட்டின்படி “கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள், அநீதி புரிபவர்கள்” என அழைக்கப்பட்டனர்.

வெல்லப்பட்ட நாடுகளின் மக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய கொடுமைகள் கணக்கில் அடங்காதவை. உதாரணமாக, கலிஃபா உமரின் காலத்தில் அவரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கடுமையான வரி விதிப்பு முறை நடைமுறையிலிருந்தது. குடிமக்களால் தாங்க இயலாத அளவிற்கு வரிச்சுமைகள் அவர்களைத் துன்புறுத்தின.

முஸ்லிம்   வரலாற்றாசிரியரான புரஃபசர் ஃபசல் அகமது என்பவர் எழுதிய ஒரு குறிப்பின்படி, பாரசீக அடிமையான அபு-லுலு-ஃபிரோஸ் என்பவன் ஒரு நாள் கலிஃபாவிடம் சென்று   இந்தத் தாங்க முடியாத வரிச்சுமையைப் பற்றிக் கூறி, அதனைக் குறைக்கும்படி மன்றாடுகிறான்.

‘என்னுடைய உரிமையாளர் எனக்குச் தர வேண்டிய சம்பளத்தின் பெரும்பகுதியை உங்களுக்குச் செலுத்த வேண்டிய வரிக்காகப் பிடித்தம் செய்து கொள்கிறார். அதனால் நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே, தயவு செய்து வரியைக் குறையுங்கள்’ எனக் கேட்கிறான் லுலு-ஃபிரோஸ்.

கலிஃபா உமரானவர் அவ்வாறு செய்ய மறுத்து, லுலு-ஃபிரோசை அங்கிருந்து விரட்டியிருக்கிறார். கோபமுற்ற லுலு-ஃபிரோஸ் அடுத்த நாள் ஒரு கத்தியுடன் வந்து கலிஃபா உமரைக் குத்திக் கொலை செய்துவிட்டான்.

இதிலிருந்து இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் விதித்த வரிகள் எத்தனை கடுமையாக இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவைப் பிடித்த சிறிது காலத்திலேயே இஸ்லாமிய நீதியும், ஆட்சியும் அக்காலத்தில் மிக செல்வ வளம் பொருந்திய, நாகரீக முன்னேற்றமடைந்த ஹிந்துக்களை மிகக் குறுகிய காலத்திலேயே பிச்சைக்காரர் களாக்கியதுடன், ஹிந்துப் பெண்கள் முஸ்லிம்களின் வீட்டின் முன் தங்கள் குழந்தைகளுடன் வந்து பிச்சையெடுக்கும் நிலைக்குக் கொண்டு சென்றது.

வெல்லப் பட்ட இந்தியர்களின் மீது விதிக்கப்பட்ட கடுமையான வரிச்சுமைகள் காரணமாக இந்தியர்கள் தங்கள் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமைச் சந்தையில் விற்கும் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

மேலும் பல இலட்சக்கணக்கானோர் காடுகளுக்குத் தப்பியோடி விலங்குகளைப் போல வாழ்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களாகவும், காட்டில் கிடைப்பதை உண்டு வாழ்பவர்களாகவும் ஆனார்கள்.

Al-Qaradawi போன்ற இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களால் வெல்லப்பட்ட நாட்டு மக்களால் மகிழ்வுடன் வரவேற்கப்பட்டார்கள் என்று கூறுவதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்பதே உண்மை.

போரிடத் தெரியாத ஏழை விவசாயிகள் கூட இஸ்லாமியப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள். காஸா மீது இஸ்லாமிய அரேபியர்கள் படையெடுத்தபோது ஏறக்குறைய 4000 விவசாயிகள் அவர்களை எதிர்த்துப் போர் புரிந்ததால் கொல்லப்பட்டார்கள்.

இந்தியாவிலும் இதுவே நடந்தது. முன்பே கூறியபடி சிந்துவில் பின்-காசிம் இந்துக்களை மூன்று நாட்கள் படுகொலை செய்தான். ஹிந்துகள் இஸ்லாமியர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றால் பின்-காசிம் எதனால் ஹிந்துக்களைக் கொன்றான்? என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் சித்தூரில் ஏறக்குறைய 30,000 விவசாயிகள் ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு ஆயுதம் தாங்கிப் போர் புரிந்தார்கள்.

இந்தியாவின் பேரரசராக அறியப்படுகிற, அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்பவராக சொல்லப்படுகிற மொகலாயப் பேரரசரான அக்பரை எதிர்த்து இந்த விவசாயிகள் போரிட்டனர் என்பது கவனிக்கத்தக்கது.

மொகலாயப்படையுடன் இவர்கள் போரிட்டுத் தோற்று, சரணடைந்த போது அவர்கள் அத்தனை பேர்களையும் படுகொலை செய்ய அக்பர் உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை நமக்கு விளக்குகிறது.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் நாட்டைப் பிடிக்க விடாமல் அந்தந்த நாட்டு மக்கள் கடுமையாகப் போராடினார்கள் என்றே பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

உதாரணமாக, அல்-குஃபி, ‘சச் நாமா’வில், பின்-காசிம் படையினை (டிபாலில்) காஃபிர்கள் நான்கு புறங்களிலும் சூழ்ந்து கொண்டு மிகத் தீரத்துடன் போரிட்டதால், இஸ்லாமியப் படையணிகள் பல முறை நிலைகுலைந்து பின் வாங்க வேண்டிய நிலை இருந்தது என்று எழுதுகிறார்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் போது, இந்திய மக்கள் மிக மிக அபூர்வமாகவே, விருப்பத்துடன் தங்களை இஸ்லாமியர்களுடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை.

தொடர்ந்து ஹிந்து ஆண்கள் போரிட்டு மடிய, அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்படுவதுவே தொடர்ந்து நடந்து வந்தது. சிற்சில இடங்களை முஸ்லிம் படைகள் எளிதாகக் கைப்பற்றியதற்கான காரணம், இவர்களின் ஈரமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு அருவருப்புற்று, போரிடுவதைத் தவிர்த்ததாலேயே நிகழ்ந்தது.

சுல்தான் முகமது என்கிற கஜினி முகமது 1024-இல் சோம நாத் ஆலயத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைக் குறித்து, வரலாற்றாசிரியர் இப்ன்-அசிர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘ஏராளமான ஹிந்துக்கள் தங்களின் கைகளைத் தங்களின் கழுத்துகளில் கட்டிக் கொண்டு அணி, அணியாகக் சோம நாதர் ஆலயத்தினுள் நுழைந்தார்கள். கண்களில் கண்ணீர் வழிய, தங்களின் ஆலயத்தைத் தாக்க வேண்டாமென்று சுல்தான் முகமதுவிடம் கெஞ்சினர்.

இறுதியில் போர் ஒன்றே முடிவு என்ற நிலையில் போரிட்ட ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் சோம நாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொல்லப்பட்டனர்.’

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் சாதாரண ஹிந்துக்கள். தங்களின் கோவிலின் புனிதத்தையும், மரியாதையையும் காப்பதற்கு உறுதி பூண்ட பக்தர்கள். அதே சோம நாதர் ஆலயம் மூன்று முறை இடித்து நொறுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் ஹிந்துக்களால் கட்டப்பட்டது. இறுதியில் அதுவும் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டது.

இவை போன்ற சம்பவங்களே இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களால் வரவேற்கப்படவில்லை என்பதற்கான உதாரணங்கள்.

சுல்தான் முகமது என்கிற கஜினி முகமதின் முக்கிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர் அல்-புரூனி (Al-Berunei 973-1050). அடிப்படையில் புரூனி ஒரு சிறந்த கல்வியாளர்.

பாரசீக நாட்டைச் சேர்ந்தவர். 1070-ஆம் வருடம் மத்திய ஆசியாவில் இருந்த க்வார்ஸிம் (Kwarizm) நாட்டின் மீது கஜினி முகமது படையெடுத்தபோது அவரால் சிறைப்பிடிக்கப்பட்டவர். சுல்தான் முகமது அவரைத் தனது தலை நகரான கஜினிக்குக் கொண்டு வந்து, தனது மந்திரி பரிவாரத்தில் ஒரு முக்கிய இடம் கொடுத்து வைத்திருந்தான். இந்தியாவை நோக்கிப் படையெடுத்தபோது தன்னுடன் அல்-புரூனியையும் கஜினி முகமது அழைத்து சென்றான்.

அந்தப் படையெடுப்புகள் குறித்து அல்-புரூனி எழுதியிருக்கும் குறிப்புகள் மிக முக்கியமானவை. வெல்லப்பட்ட இந்திய மக்களின் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் சுமத்திய கடுமையான சுமைகள், வரிகள் குறித்து அவரெழுதிய குறிப்புகள், இஸ்லாமியப் படையெடுப்புகளின் கோர முகத்தைக் காட்டுகின்றன.

அல்-புருனீ ஏறக்குறைய இருபது வருடங்கள் வரை இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து இந்திய தத்துவங்களையும், இதிகாசங்களையும், கணித முறைகளையும், மதக் கோட்பாடுகளையும் இந்திய பண்டிதர்களிடம் கற்றுத் தேர்ந்தவர்.

அவ்வாறான அல்-புரூனி, சுல்தான் முகமதின் இந்தியப் படையெடுப்புகள் பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘முகமது கஜினி தனது இந்தியப் படையெடுப்புகளின் மூலம் அந்நாட்டின் செல்வ வளத்தைச் சூறையாடியதுடன் அதன் முன்னேற்றத்தையும் அழித்து, இல்லாமலாக்கினான். அதன் காரணமாக ஹிந்துக்கள் அணுத்துகள்களைப் போலச் சிதறியோடினார்கள். இதனாலேயே அவர்கள் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களை வெறுத்து ஒதுங்கினார்கள்’ என்கிறார்.

இந்தியர்களிடையே இஸ்லாம் ஒரு பெரிய மதிப்பையோ அல்லது மரியாதையையோ பெற்றதில்லை. அல்-கரடாவி சொல்கிறார், ‘வாளின் துணை கொண்டு ஒரு நாட்டை வெல்வது எளிது.

ஆனால் ஒரு போதும் அதன் சாதாரண மக்களை ஒரு மதத்தை நோக்கித் திருப்ப இயலாது’. ஆக்கிரமிப்புகள் கடந்து, கொலைகள் மனதில் மறைந்த பின், சாதாரண மக்களுக்கும் இஸ்லாமிற்கும் இடையிலிருந்த இடைவெளிகள் நீக்கப்பட்டு இஸ்லாம் ஓரளவிற்குத் தான் ஆக்கிரமித்த பகுதிகளில் பரவ ஆரம்பித்தது.

அல்-புரூனி, ‘முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகளை ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளிடம் காட்டி, அவர்கள் பிசாசுகள் என மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மேலும் முஸ்லிகள், தாங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் தாங்கள் செய்வதற்கு எதிரானதாகவும், மோசமானதாகவும் இருக்கிறது என்பார்கள்.

இதன் காரணமாக குரசான், பரசீகம், இராக், மோசுல், சிரியா மற்றும் பல நாடுகளிலிருந்து முதலில் பவுத்தர்களும், அதனைத் தொடர்ந்து ஜொராஸ்டிரியர்களும் வெளியேறினர். மொகமது-பின்-காசிம் ப்ராஹ்ம்னாபாத், மூல்தானிலிருந்து கன்னோஜ் வரை கைப்பற்றி நடத்திய பேரழிவுகள் ஹிந்துக்களிடையே மிகப் பெரும் எதிர்ப்பையும், ஆழமான வெறுப்பையும் தோற்றுவித்தன’ என்கிறார்.

ஹிந்து போராளிகள் இஸ்லாமியர்களிடம் அடிபணிவதற்குப் பதிலாக, எளிதில் நெருங்க முடியாத மூல்தானுக்கு அடுத்துள்ள மலைப்பகுதிகளிலும், அலிகர் போன்ற பகுதிகளிலும் சென்று தங்கிக் கொண்டனர். முகலாய அரசர் பாபர் தான் ஆக்ரவிற்கு அருகில் இது போன்ற போராளிகளை எதிர்கொண்டதாகவும் எழுதி வைத்திருக்கிறார்.

இரக்க குணம் மிகுந்தவராக சொல்லப்படுகிற மொகலாய அரசர் ஜஹாங்கீர் (1627) காலத்தில் பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் முகலாயர்களை எதிர்த்து நாட்டை விட்டு வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுந்தார்கள். “இரக்கமுள்ள” ஜஹாங்கீர் ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர்களைப் பிடித்து அவர்களை 1619-20-ஆம் ஆண்டுகளில் இரான் நாட்டில் அடிமைகளாக விற்றுவிட்டார்.

அல்-புரூனி மேலும் சொல்கிறார், ‘சுல்தான் முகமது கஜினி படையெடுத்து வந்து பல பத்து ஆண்டுகள் கடந்த பின்னும், இந்திய ஹிந்துக்களில் பெரும்பாலோர் “அமைதி மார்க்கமான” இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்கள் இஸ்லாமை அமைதி மார்க்கமாக நினைத்திருந்தால் தயக்கமில்லாமல் அதனை அரவணைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மாறாக அவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை அறவே வெறுத்து ஒதுக்கினர்.’

இதே நிலமை, இந்தியா இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னும் நீடித்தது. இந்தியாவின் பயணம் செய்த பல இஸ்லாமியப் பயணிகளும், வியாபாரிகளும் பெரும்பாலான இந்தியா இன்னும் ஹிந்து இந்தியாவாகவே இருப்பது குறித்தான தங்களில் அதிருப்தியை எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமியப் பயணி, இஸ்லாம் இதுவரை ஒரே ஒரு இந்தியனைக் கூட மதமாற்றம் செய்ய இயலவில்லை என்கிறார்.

851-ஆம் ஆண்டு இந்தியாவில் பயணம் செய்த சுலைமான் என்னும் அராபிய வியாபாரி அவரது குறிப்பில், ‘எனக்குத் தெரிந்து ஒரெயொரு இந்தியனோ அல்லது சீனனோ இதுவரை இஸ்லாமைத் தழுவியதாகவோ அல்லது அரபு மொழி பேசுவதாகவோ எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதியிருக்கிறார்.

இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்து ஆறிலிருந்து எட்டு நூற்றாண்டுகள் ஆன பிறகு, மொகலாய அரசர் பாபரும், மொராக்கிய பயணியான இப்ன்-பதூதாவும் இதே நிலையைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு ஒன்பது நூற்றாண்டுகள் கழிந்து ஜஹாங்கீரும் இதனையே கண்டார்.

(தொடரும்).

-அ.ரூபன்

இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்ததன் நோக்கம் என்ன??

Exit mobile version