ilakkiyainfo

வயசு 23 தான்’ .. ‘ஆனா 8 பெண்களுடன் கல்யாணம்’!.. 9-வதாக ஏமாறிய இளம்பெண்..! மிரள வைத்த தஞ்சை வாலிபர்..!

வயசு 23 தான்’ .. ‘ஆனா 8 பெண்களுடன் கல்யாணம்’!.. 9-வதாக ஏமாறிய இளம்பெண்..! மிரள வைத்த தஞ்சை வாலிபர்..!
November 23
07:15 2019

ஒரத்தநாடு அருகே 9 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சந்தோஷ் (23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கருவிழிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்த சத்யா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் மனைவியுடன் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

சில நாட்கள் கழித்து திடீரென சந்தோஷ் காணாமல் போயுள்ளார். இதனால் தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டுமென சத்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

hrewqஇதனிடையே திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை காதலித்து சந்தோஷ் திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒக்கநாடு பகுதியில் வசித்து வந்ததது சத்யாவுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதுபோல் 8 பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.

ஆசை வார்த்தைகளை கூறி இளம்பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்வாராம். பின்னர் சில மாதங்களில் அவர்களை தவிக்கவிட்டு மாயமாகிவிடுவை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com