ilakkiyainfo

13 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

13 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
November 28
10:43 2016

அமெ­ரிக்கப் பாட­சாலை ஆசி­ரியை ஒருவர் 13 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் நீண்ட கால­மாக பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக சுமத்தப்­பட்டிருந்த குற்றச்சாட்டியினை ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

ஜெமி ஹையட் எனும் 32 வய­துடைய குறித்த பெண், அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தின் லெஸ்லி நக­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாகப் பணி­யாற்­றி­னார்.

இவர் இப்­பா­ட­சா­லையில் கல்வி பயின்ற 13 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் முறை­யற்ற தொடர்­பு­களை ஆரம்­­பித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார். குறித்த ஆசிரியை மேற்­படி மாண­வ­னுடன் 2014 முதல் 2015 ஆம் ஆண்டு இறுதி வரை பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­பட்­டது.

அதை­ய­டுத்து இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் ஜெமி ஹையட் கைது செய்­யப்­பட்டார்.

ஜெமி ஹையட்­டுக்கு எதி­ராக நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது, மேற்­படி மாணவன் 11 வய­தா­ன­வ­னாக இருந்தேபோதே பாட­சா­லைக்கு வெளியே அவனை சந்­திக்கும் வழக்­கத்தை ஜெமி ஹையட் ஆரம்­பித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

20930teacherபின்னர், இம்­மா­ண­வ­னுடன் ஜெமி ஹையட் பாலியல் உறவில் ஈடு­படத் தொடங்­கினார் எனவும் அப்­போது இம்­மா­ணவன் 13 வயது சிறு­வ­னாக இருந்தான் எனவும் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர்.

இம்­மா­ண­வ­னுக்கு துப்­பாக்கி மற்றும் கையடக்கத்தொலை­பே­சியை ஜெமி ஹையட் வழங்­கினார் எனவும் அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

துப்­பாக்­கியை வழங்­கும்­போது இம்­மா­ணவன் 14 வய­தா­ன­வ­னாக இருந்தான். தனது கைத்­துப்­பாக்கி காணாமல் போன­தாக ஜெமி ஹையட் முறை­பாடு செய்­தி­ருந்தார். ஆனால், அத்­துப்­பாக்­கியை மேற்படி சிறு­வ­னுக்கு ஜெமி ஹையட் வழங்­கி­யி­ருந்தார் என்­பது பின்னர் தெரியவந்­தது.

20930teacher-24இம்­மா­ண­வ­னுடன் ஜெமி ஹைட் இரு மாத காலம் ஒன்­று­விட்டு ஒருநாள் தொடர்ச்­சி­யாக பாலியல் உறவில் ஈடு­பட்டார் எனவும் நீதிமன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

தன் மீதான குற்­றச்­சாட்டை ஜெமி ஹையட் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கான தண்டனை இன்னும் அளிக்கப்படவில்லை. அவருக்கு அதிகபட்சமாக  ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com