நீங்கள் வரலாற்றை புத்தகங்களிலும், இணையங்களிலும் வாசித்திருப்பீர்கள். பல வியக்கவைக்கும் நிகழ்வுகள், பெரும் எண்ணிக்கையில் நடந்த போர்கள், போராட்டங்கள் என நமது கற்பனையை விஞ்சும் அளவிற்கு பல நிகழ்வுகள் நமது வரலாற்றில் நடந்துள்ளது.
எந்த ஒரு புதிய நிகழ்விற்கும் ஒரு தொடக்க புள்ளி தேவை. அப்படி தொடக்க புள்ளியாக இருந்த சில விஷயங்களும், வரலாற்றி புரட்டிப் போட்ட சில விஷயங்களும், சாதாரண கடந்த நிகழ்வுகளும் அடங்கிய ஒரு புகைப்பட தொகுப்பு…
கருப்பு – வெள்ளை காதல்…
சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கருப்பு, வெள்ளையர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதை உடைத்து, தங்கள் காதல் மூலம் முத்திரை பதித்தவர்கள் இந்த ஜோடி. இந்த ஆண் ஸ்வீடிஷ் நடிகர் டோலப் லுண்ட்கிரன், இந்த பெண் ஜமைக்கா பாடகி கிரேஸ் ஜோன்ஸ். இவர்கள் இருவரும் 1980களில் உறவில் இருந்தனர்.
கவர்ச்சி நடன பெண்…
மதா ஹரி அல்லது மர்க்ரீத் என அழைக்கப்பட்ட இந்த பெரும் ஒரு பிரபல கவர்ச்சி நடன கலைஞர். மர்க்ரீத் எனும் இந்த பெண் ஜெர்மனியில் முதலாம் உலக போரின் போது கைது செய்யபட்டார். நடன வேலையை விட்டு, இவர் அந்த நாட்டில் உளவாளியாக இருந்ததன் காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் என்ன ஸ்பெஷல்?
இந்த படத்தில் என்ன ஸ்பெஷல், இந்த பின்னணியில் என்ன பெரிய வரலாறு இருக்க போகிறது என யோசிக்கிறீர்களா? இருக்கிறது! இந்த பெண்மணி தான் உலகின் முதல் டிரைவர். இந்த படம் 1900களில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
இந்த பிரபலம் யார்?
இந்த படத்தில் இருக்கும் பிரபலத்தில் சிலர் உடனே கண்டுபிடித்திருக்கலாம். ஆம், நடுவில் இறகுகளான தொப்பி அணிந்திருக்கும் அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அமெரிக்காவின் ஹோபி மலைவாழ் மக்களுடன் இவர் 1931ல் எடுத்துக் கொண்ட படம் இது.
உயரமான மனிதர்!
இவர் 1918ல் பிறந்தவர். இவரது பெயர் ராபர்ட் வாட்லோ. முதலாவது பிறந்தநாள் கொண்டாடும் போது இவரது உயரம் மூன்று அடி மூன்றரை அங்குலம். தொடர்ச்சியாக இவர் வளர்ந்து கொண்ட போனால். 1937ல் இவரது உயரம் எட்டடி, நான்கு அங்குலமாக இருந்தது. அப்போது இவர் உலகின் உயர்ந்த மனிதராக சாதனை படைத்தார்.
அர்னால்ட்!
முனிச் பகுதியில் வெற்றுடலுடன் உலா வரும் அர்னால்ட். மக்கள் மத்தியில் பாடி பில்டிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜிம்மிற்கு செல்ல ஊக்குவிக்கவும் இப்படி ஓர் பிரமோஷன் நடந்திருக்கிறது. இந்த படம் 1967 நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படமாகும்.
புலி குட்டிகள்!
இந்த படம் 1937ல் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். விலங்குகள் காட்சி சாலையின் பாதுகாவலர் புதியதாக பிறந்த புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த குட்டிகளும், தங்களுக்கு உணவளிக்கும் நபருடன் வேடிக்கையாக விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றன.