ilakkiyainfo

15 வருடங்களுக்கு முன்பு “ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி??- (பகுதி-2)

15 வருடங்களுக்கு முன்பு “ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி??- (பகுதி-2)
April 26
11:43 2015

இதற்கிடையில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவு, ஆனையிறவு பகுதியில் ஈடுபடுத்தப் பட்டிருந்த 54வது படைப் பிரிவின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது, அது பச்சிலைப்பள்ளி மற்றும் வடமராட்சி கிழக்கு பிரதேசசபை பகுதி முகாம்களில் நிலை கொண்டிருந்தது.

53வது படைப் பரிவு ஒரு உயர்தர படையாகும், அதற்கு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சி வழங்கப் பட்டிருந்தது.

எல்.ரீ.ரீ.ஈயினது இரண்டாம் கட்டப் போராட்டம் ஒரு பன்முகத் தாக்குதலாக 26, மார்ச்,2000ல் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சாள்ஸ் அன்ரனி காலாட் படை பிரிவின் தலைவரான வசந்தன் மற்றும் கடற்புலிகளின் வீரேந்திரன் ஆகியோரின் தலைமையிலாலன ஒரு கூட்டுச் செயற்பாடாக அது இருந்தது, இவர்கள் 3வது செயற்பாட்டு தலைமையகம் நிலை கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு கரையோர செம்பியன்பற்று – மருதங்கேணி – தாளையடி வளாகத்தை தமது கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக் கொண்டனர்.

அவை வங்காள விரிகுடா மற்றும் யாழ்ப்பாண கடலேரி என்பனவற்றுக்கு இடையே அமைந்துள்ள நிலத் துண்டில் அமைந்துள்ளது. அதனால் இராணுவம் மண்முனை மற்றும் அம்பான் ஆகிய இடங்களிலுள்ள முகாம்களை விட்டு வெளியேறியது, வீரர்கள் கடலேரியின் மேற்குப் பகுதியில் உள்ள நிலைகளில் குடியேறினர்.

அதேநேரத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு கமாண்டோ படைப் பிரிவான சிறுத்தை பிரிவு, ஏ – 9 நெடுஞ்சாலையில் இயக்கச்சிக்கு வடக்கே உள்ள பெரிய சந்தியான பளையின் மீது ஒரு அதிரடி சோதனை நடத்தி, குறைந்தது இராணுவத்தின் 11 பீரங்கிகளையாவது பின்வாங்கச் செய்தது.

bal_op_17பிரிகேடியர் பால்ராஜ்

எல்.ரீ.ரீ.ஈயின் துணை இராணுவ தலைவர் பால்ராஜ் தலைமையிலான ஒரு இராணுவ படைப் பிரிவு, யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பளை மற்றும் எழுதுமட்டுவாள் இடையேயான நீண்ட பிரதேசத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டது.

இதில் அரசங்கேணியை சுற்றியுள்ள பகுதிகள், இத்தாவில், இந்திரபுரம், முகமாலை மற்றும் கோவில்காடு ஆகிய பகுதிகள் உட்படும். இத்துடன் ஆனையிறவு – இயக்கச்சி முகாம்கள் மற்றும் யாழ்ப்பாணம் என்பனவற்றுக்கு இடையே இருந்த பிரதான பாதை இணைப்பு திறமையாக வெட்டப்பட்டது.

Tu_9567

பிரிகேடியர்    பால்ராஜினது பல இராணுவ சாதனைகளில் சிகரம் போல திகழ்வது, 2000 ம் ஆண்டில் ஏ – 9 நெடுஞ்சாலையில் உள்ள இத்தாவில்லில் அவர் நடத்திய போர்தான்,

அது ஆனையிறவு கோட்டை அரண் மற்றும் கிளாலி – எழுதுமட்டுவாள் – நாகர்கோவில் விநியோகப் பாதை என்பனவற்றுக்கு இடையேயான போக்குவரத்து வழியினை தொடர்ச்சியாக 24 நாட்கள் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.

இந்த தந்திர உத்தியின் பங்களிப்பின் விளைவாகத்தான்; 22 ஏப்ரல்,2000 ல் முக்கியமாக ஆனையிறவு வீழ்ந்தது.

எனினும் ஏப்ரல் 10ல் படைகள் பாதையின் பெரும்பகுதியை திரும்பக் கைப்பற்றின, ஆனாலும் புலிகளை முற்றாக அகற்றுவதில் தோற்றுப் போயின.

எனினும் ஒரு சுற்றுப் பாதை வீதியுடன் இணைப்பை பேண உதவியது. பளையில் ஏ – 9 நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு நோக்கி ஒரு கிளை வீதி கிளாலி வழியாக புலோப்பளை சென்று, பின்னர்  வடக்கு பக்கமாக   கச்சேரி மற்றும் அல்லிப்பளை ஊடாகச் செல்கிறது,

அங்கிருந்து அது கிழக்கு நோக்கி கொடிகாமத்துக்கு ஊடாகச் செல்கிறது, அந்த இடத்தில் வாகனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை அடைய முடியும்.

எனினும் இந்தப் பாதையில் எல்.ரீ.ரீ.ஈ தீவிர அழுத்தத்துக்கு உள்ளாவதால் எல்.ரீ.ரீ.ஈ பூனரியானில் இருந்து கடலேரிக்கு குறுக்காக கிளாலியை நோக்கி பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டன.

மேலும் மார்ச் 26ல் எல்.ரீ.ரீ.ஈயின் கிளிநொச்சி தளபதி தீபன் தலைமையிலான ஒரு குழுவினர் வற்றிப் போயிருந்த சுண்டிக்குளம் கடலேரி வழியாக குடாநாட்டின் தென்கிழக்கு பகுதியில் முன்னேறி முள்ளியான் மற்றும் வண்ணான்குளம் பிரதேசத்தில் ஒரு நிலையை நிறுவினார்கள்.

ஆனால் முன்னிலை பாதுகாப்பு நிலைகளுடாக முன்னேறிய குழுவினர் ஆனையிறவை நோக்கி முன்னேறுவது வதிரியான் பிரதேசத்தில் வைத்து தடுத்து நிறத்தப்பட்டது.

மூன்றாவதும் தீர்க்கமானதுமான கட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் போராட்டம் ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை மதியம் வரை நடைபெற்றது. ஒரு சிறுத்தை கமாண்டோ திடீர் தாக்குதல் மூலம் மருதங்கேணி கரையோரத்தை எல்.ரீ.ரீ.ஈ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை காணமுடிந்தது, அதன் மூலமாக மேற்குப் பக்கம் நோக்கி மருதங்கேணி – புதுக்குடா சந்தி வீதி வழியாக முன்னேற முடிந்தது, அது கிழக்கு கரையோரத்தையும் மற்றும் ஏ – 9 நெடுஞ்சாலையையும் இணைக்கிறது.

புதுக்குடா சந்தியானது இயக்கச்சி மற்றும் பளை இடையில் உள்ளது. எல்.ரீ.ரீ.ஈ, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 அடி நீளமான வரப்பை இடித்து நிர்மூலமாக்கியதன் பின்னர் தெற்குப் பகுதி பிரதேசங்களான முகவில், சோரன்பற்று, மற்றும் மாசார் ஆகிய இடங்களுடாக முன்னேறியது.

புலிகள் ஏ – 9 நெடுஞ்சாலையூடாக தெற்குப் பக்கமாக முன்னேறி இயக்கச்சி முகாமின் தெற்குப் பகுதியை அடைந்தார்கள்.

இதன் விளைவாக ஆனையிறவு மற்றும் இயக்கச்சி என்பன ஆபத்தில் சிக்கிக் கொண்டன.ep photo-1

அதன்பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கச்சி முகாம்மீது கோவில் வயல் மற்றும் சங்கத்தார் வயல் ஆகிய இடங்களில் இருந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.

27_11_06_banu_01
கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு

பானுவின் தலைமையின் கீழ் இருந்த கவச மற்றும் பீரங்கி பிரிவுகள் குண்டுமாரி பொழிந்த வண்ணம் தளத்தை நோக்கி மிக மெதுவாக முன்னேறியது. ஆனையிறவு தளத்தில் இருந்த தொலைத் தொடர்பு கோபுரம் தகர்க்கப் பட்டதால் வடக்கிற்கான அனைத்து தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

இத்தகைய நெருக்கடியான கட்டத்தில் பால்ராஜ் தலைமையிலான மொத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களும் ஏ – 9 நெடுஞ்சாலையை கைவிட்டு இயக்கச்சியை சுற்றி நடைபெற்ற போரில் இணைந்து கொண்டார்கள், அதற்கு முன் இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் விதமாக பளை வடக்கு மற்றும் எழுதுமட்டுவாள் தெற்கு ஆகிய இரண்டு இடங்களிலும் இரண்டு தடுப்பு காவலரண்களை நிறுவினார்கள்.

ஏப்ரல் 20,2000 ல் இயக்கச்சியை சுற்றியும் அதன் உள்ளேயும் பலத்த போராட்டம் ஆரம்பமானது. புலிகள் முகாமுக்கு தென் பகுதியில் தங்களை நிலை நிறுத்தி ஆனையிறவிலிருந்து அதை துண்டித்தார்கள்.

aanaiyiravuஇயக்கச்சியின் வீழ்ச்சி

21 ஏப்ரல், 2000ல் இயக்கச்சி வீழ்ந்தது. எல்.ரீ.ரீ.ஈ முகாமுக்குள் நுழைந்து ஆயுதக் கிடங்குகளையும் மற்றும் கட்டிடங்களையும் நிர்மூலமாக்கியது. அதன் பின் யுத்த அரங்கானது ஆனையிறவை நோக்கி நகர்த்தப்பட்டது.

எல்.ரீ.ரீ.ஈ ஆனையிறவை நோக்கி வடக்கு, வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுடாக முன்னேறியது. அந்த நீண்ட இரவு முழுவதும் பலமான கனரக சூட்டுப் பரிமாற்றம் இடம்பெற்றது, மற்றும் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவம் வெளியே நகரத் தொடங்கியது.

எப்ரல் 22, 11.30 மணியளவில் ஆனையிறவில் இருந்த மிகப்பெரிய கோட்டை அரணை அவர்கள் கைவிட்டுச் சென்றார்கள். அதே நாள் பிற்பகல் 2.30 மணியளவில் எல்.ரீ.ரீ.ஈ அதை நோக்கி அணிவகுத்துச் சென்றது. ஏப்ரல் 23, 2000ல் அங்கு கொடியேற்றப்பட்டது.

ஆனையிறவுக்கு எதிரான எல்.ரீ.ரீ.ஈ யின் கட்டங் கட்டமான முன்னேற்றம் உருவாக்கப் பட்டதின் பின் ஏற்பட்ட பாதுகாப்பு படைகளின் இந்த திடீர் சரணாகதி ஒரு எதிர் உச்சக்கட்டமாக அமைந்துவிட்டது.

எனினும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த போராட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு படியையும் பற்றி செய்திகளை வெளிப்படுத்தி வந்த எல்.ரீ.ரீ.ஈ, எப்ரல் 21ல் இயக்கச்சி வீழ்ச்சியடைந்தது பற்றிய செய்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அந்தச் செய்தியை ஆனையிறவு முகாமின் வீழ்ச்சி பற்றிய செய்தியை வெளியிடும்போதுதான் வெளியிட்டார்கள்.

இது ஒருவேளை வெளிப்படுத்துவது, இயக்கச்சியின் கட்டுப்பாட்டை ஏற்றெடுத்த பின்னர், ஆனையிறவு விரைவிலேயே வீழ்ந்துவிடும் என்று எல்.ரீ.ரீ.ஈ உச்சமான நம்பிக்கையில் இருந்திருக்க வேண்டும், அல்லது அங்குள்ள துருப்புகள் இயக்கச்சியின் தோல்வியின் சில மணிக்கூறுகளுக்கு உள்ளேயே பின்வாங்கிச் சென்றுவிடுவார்கள் என்கிற முன்கூட்டிய அறிவு அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு படைகள் ஆனையிறவை கைவிட்டுச் சென்றது, அது தொடர்பான கட்டளை பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்து அவர்களுக்கு கிடைத்த பின் மாத்திரமே.

இராணுவ தளபதி ஸ்ரீலால் வீரசூரிய தலைமை அதிகாரி லயனல் பலகலவுக்கு கட்டளை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார், அது தனிப்பட்ட கூரியர் மூலம் ஆனையிறவுக்கு அனுப்பப் பட்டது. கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எகொடவெலவுக்கு ஏப்ரல் 21,2000 இரவு 10 மணிக்கு அது கிடைத்தது.

பின்வாங்கிச் செல்லும் துருப்புகள் ஆரம்பத்தில் ஏ – 9 நெடுஞ்சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ள பளையை நோக்கி நகர்ந்தார்கள், ஆனால் எல்.ரீ.ரீ.ஈ அவர்களை விரட்டியடித்ததும், அவர்கள் பாவனையில் இல்லாத தொடரூந்து பாதை மற்றம் அதற்கு மேற்கில் உள்ள மணல்பாதை என்பனவற்றை பயன்படுத்தினார்கள்.

பளையில் இருந்து படை வீரர்கள் பாதுகாப்புக்காக மேற்குப் புறமாக கிளாலியை நோக்கி நகர்ந்தார்கள்.

ஆனால் இந்தப் பாதையை நோக்கி புலிகள் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டதும் இராணுவம் மற்றொரு சுற்றுப்பாதையான – ஆனையிறவிலிருந்து வட மேற்கு நோக்கி கிளாலிக்கு – குறிஞ்சாதீவு, ஊர்வானிக்கான்பற்று, மற்றும் தன்மான்கேணி ஊடாகச் செல்லும் கரடு முரடான பாதையை பயன்படுத்தினார்கள்.

எனினும் இந்த நீண்ட பாதையூடாகச் செல்லும் போது எல்.ரீ.ரீ.ஈயின் இடைவிடாத குண்டுத் தாக்குதலுக்கு அப்பால் பல வீரர்கள் வெப்பம் மற்றும் தாகத்தால் ஏற்படும் நீரிழப்பு காரணமாக பலியானார்கள்.ephot-3

இருந்த போதிலும் ஒரு நல்ல எண்ணிக்கையான துருப்புகள் ஆனையிறவை விட்டு வெளியேறினார்கள், பெரும்பாலும் கால்நடையாகவே சென்றார்கள்.

அங்கிருந்து வெளியேறும் முன்னர் அவர்கள் சில பீரங்களை வலுவிழக்கும்படி செய்து விட்டுச் சென்றார்கள், அனாலும் கூட எல்.ரீ.ரீ.ஈ பிற ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களுக்கு அப்பால், 152 மி.மீ ஆட்டிலரிகள், சில எண்ணிக்கையிலான தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உட்பட சில சக்திவாய்ந்த துப்பாக்கிகளை கைப்பற்றியது. எல்.ரீ.ரீ.ஈயினால் வெளியிடப்பட்ட பூர்வாங்க பட்டியல் மலைக்க வைக்கும் அளவுக்கு ஆயுதக் குவியல் இருப்பதை வெளிப்படுத்தியது. பல வழிகளிலும் ஆனையிறவு கொழும்புக்கு அப்போது ஒரு இராணுவ வீழ்ச்சியாகவே இருந்தது.

குடிநீர்

ஆனையிறவு தளத்தில் 15,000 க்கும் மேற்பட்ட துருப்புகள் இருந்த போதிலும் குடாநாட்டில் 5,000 க்கும் குறைவான எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களே இருந்தார்கள், இராணுவம் தோற்கடிக்கப் பட்டது எதனாலென்றால் அந்த நேரத்தில் அது ஒரு சோர்வடைந்த படையாக இருந்தது.

எனினும் படைகளை ஆனையிறவை விட்டு வெளியேறும்படி பாதுகாப்பு நிறுவனம் முடிவெடுத்தது காரணமாக, முதலாவதாக குடிநீர் பற்றாக்குறையைச சந்திக்கும் நிலைக்கு அது தள்ளப்பட்டது. முகாமில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது, ஆனால் பழுதடைந்து திருத்தப் படாத நிலையில் இருந்தது.

உமையாள்புரம் மற்றும் இயக்கச்சியில் இருந்து கொண்டு வரப்படும் நீர் கிடைத்து வந்தது இதைப்பற்றி புகார் தெரிவிக்காமல் ஒருவேளை படையினரை மெத்தனமாக தூங்க வைத்திருக்கலாம்.

எனினும் இயக்கச்சி முற்றுகைக்கு உள்ளானதும் அளவுக்கு அதிகம் ஆட்கள் நிரம்பிய முகாமில் தண்ணீர் நெருக்கடி சமாளிக்க முடியாததாக இருந்தது. முரண்பாடாக ஆனையிறவு முகாமில் ஏராளமான அளவில் தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் உலர் உணவுப் பங்கீட்டுப் பொருட்கள் இருந்தன, முகாமைக் கைப்பற்றியதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இவைகளை வன்னிப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகித்தது.

11 டிசம்பர் 1999 முதல் நடைபெற்ற மூன்று கட்டப் போரிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் மதிப்பிட்டிருந்தன.

20090109_EPS14

இந்த போராட்டத்தில், ஆனையிறவு இறுதிப் போரில் இறந்த 35 பேர்கள் உட்பட தனது அங்கத்தவர்களான 303 பேர் மட்டுமே இறந்ததாக எல்.ரீ.ரீ.ஈ கோரியிருந்தது.

இராணுவ தரப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என புலிகள் அறிவித்திருந்த போதிலும், இராணுவம் தனது தரப்பில் 80 பேர் மட்டுமே கொல்லப் பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்த நடவடிக்கையில் காணாமற் போயுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

புலிகள் செஞ்சிலுவை சங்கத்தினூடாக 126 வீரர்களின் உடல்களைக் கையளித்திருந்தது, அவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் உயர்தர இராணுவ உத்தியோகத்தர்களான, பிரிகேடியர். பேர்சி பெர்ணாண்டோ, கேணல். பாட்டியா ஜயதிலக, கேணல். நீல் அக்மீமன மற்றும் கேணல் ஹேவகே ஹேவவாசம் ஆகியோர் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் இறப்புக்கு பின் பதவி உயர்த்தப் பட்டார்கள். புலிகளின் பக்கத்தில் பெண்கள் படையணி தலைவி லெப்.கேணல் லக்சியா கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

ஆனையிறவு தோல்வி நாடு முழுவதிலுமுள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. எனினும் முன்னாள் ஸ்ரீலங்கா பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை தங்கள் தோல்விக்கு ஒரு தைரியமான முகத்தை வெளிக்காட்ட முயன்றார்.

ஒரு அமைச்சரவை விழாவில் உரையாற்றும்போது, ஆனையிறவில் எற்பட்ட பின்னடைவை இந்த மாதிரியான யுத்தங்களில் ஏற்படும் ஒரு இயல்பான நிகழ்வாகவே நாம் காணவேண்டும்.

வெற்றிகளையும் மற்றும் பின்னடைவுகளையும் நாங்கள் ஒரே மாதிரியாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தும்போது, தனது அரசாங்கம் “ நீடித்த இராணுவ நடவடிக்கைகளை அயராது தொடருவது என்று தெளிவாக முடிவெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

எல்.ரீ.ரீ.ஈயின் ஆனையிறவு வெற்றியானது, அந்த நேரத்தில் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை எனப் புகழப்பட்ட போதிலும், காலப்போக்கில் நிலமை படிப்படியாக மாறியது.

எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்கள் யாவும் கட்டம் கட்டமாக ஸ்ரீலங்கா இராணுவ படைகளால் 2006 – 2009 காலகட்டத்தில் திரும்பவும் கைப்பற்றப்பட்டன.

14252938231_8e819e8433_h

War Memorial Monument, Elephant Pass

ஆனையிறவு கூட 2009 ஜனவரி முதல் வாரத்தில் திரும்பவும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. முள்ளிவாய்க்காலில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஏற்பட்ட தோல்வியுடன் மே 2009ல் போரே முடிவுக்கு வந்தது.

இதன்படி எல்.ரீ.ரீ.ஈக்கு ஆனையிறவு மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் வெற்றியினால் கிடைத்த பரவச நிலை இறுதியில் அற்ப ஆயுளைக் கொண்டது என நிரூபணமாகியது.

(இந்தக் கட்டுரை இந்திய செய்திப் பத்திரிகையான “புரொட்லைன்” 2000 மே, 13 – 26 திகதிய வெளியீட்டுக்காக எழுதப்பட்டதின் திருத்திய பதிப்பாகும் மற்றும் ஆனையிறவு இராணுவ முகாம் ஏப்ரல் 22, 2000ல் எல்.ரீ.ரீ.ஈயிடம் வீழ்ந்ததின் 15வது வருட நிறைவை அடையாளப் படுத்தும் வகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது)

நன்றி-
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

15 வருடங்களுக்கு முன்பு “ஆனையிறவு முகாம்” புலிகளால் சுற்றி வளைத்து கைப்பற்றபட்டது எப்படி?? – டி.பி.எஸ்.ஜெயராஜ்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com