46 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 10 வயதான தன்­னையும் தனது இரு நண்­பர் ­க­ளையும், சுவிட்­சர்­லாந்து ஆண் பிரஜை ஒருவர் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் கூறி 56 வய­தான நபர் ஒருவர் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்­நி­லையில் இந்த விடயம் தொடர்பில் நீர்­கொ­ழும்பு பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இலங்­கையில் குடி­யு­ரிமை உள்ள சுவிட்­சர்­லாந்து பிர­ஜை­யான தற்­போது 80 வய­தான நபர் ஒரு­வ­ருக்கு எதி­ரா­கவே இந்த முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்­துள்ள 56 வய­தான நபரும், சுவிட்சர்­லாந்தில் வசித்து வரும் நிலையில் , கடந்த வருடம் இலங்­கைக்கு வந்து இங்கு தங்­கி­யி­ருக்க ஆரம்­பித்­துள்ளார்.

இந் நிலை­யி­லேயே 56 வய­தான குறித்த நப­ருக்கு கடந்த 46 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடந்த சம்­பவம் அடிக்­கடி ஞாப­கத்­துக்கு வரு­வ­தா­கவும், அதனால் தான் மன­த­ளவில் பாரிய வெட்க உணர்­வுக்கு உள்­ளா­வதால் இந்த முறைப்­பாட்டை தற்­போது வழங்­கி­யுள்­ள­தாக குறித்த நபர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் தற்­போதும் இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும், தன்னைத் துஷ்­பி­ர­யோகம் செய்த நபரால் மேலும் பல சிறு­வர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாகும் வாய்ப்­புள்­ள­மை­யையும் குறித்த நபர் தனது முறைப்­பாட்டில் குறிப்­பிட்­டுள்ளார்.

இந் நிலையில் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று (13) குறித்த 80 வய­தான சுவிஸ் பிரஜை நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவுக்கு அழைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

இதன்­போது அவ­ரிடம் வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் 46 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நடந்­த­தாக கூறப்­படும் குறித்த சம்­ப­வத்தை 80 வயதான குறித்த நபர் நிரா­க­ரிப்­ப­தாக பொலிஸ் வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் முறைப்­பாட்­டா­ள­ருடன் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் அவ­ரது இரு நண்­பர்­களும் தற்­போது வெளி­நாட்டில் உள்ள நிலையில் மேலதிக பொலிஸ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபே­சிறி குன­வர்­தன, மேல் மாகா­ணத்தின் வடக்கு பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் வெலி­கன்ன   ஆகி­யோரின் மேற்­பார்­வையில், நீர்­கொ­ழும்பு பொலிஸ் அத்­தி­யட்­சகர் கபில கட்டு­பிட்­டிய, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ரஞ்ஜித் கொட்­டச்சி ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைவாக நீர்கொழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் கீழ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி பெண் உப பொலிஸ் பரிசோதகர் நிஷாந்தி உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.