வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லையில் பிறந்து 2 நாட்க­ளே­யான சிசு காணாமல் போன விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கத்­தின்­பேரில் அனு­ரா­த­பு­ரத்தை சேர்ந்த யுவதி ஒரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் மகப்­பேற்றுக்­காக கடந்த இரண்டு நாட்­க­ளுக்கு முன்னர் ­க­லா­போ­கஸ் ­வெலவை சேர்ந்த எம்.எம். கல்­யாணி மானகே (வயது 37) என்ற பெண் அனு­ம­திக்­கப்­பட்டு குழந்­தையை பெற்­றுள்ளார்.

இரண்டு நாட்­க­ளாக தாயின் பரா­ம­ரிப்பில் வைத்­தி­ய­சா­லையில் இருந்த சிசு தாய் மல­ச­ல­கூடம் சென்று திரும்­பி­ய­போது திடீர் என காணாமல் போயி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து சிசுவின் தாயாரால் வைத்­தி­ய­சாலை தாதி­யர்­க­ளிடம் தெரி­விக்­கப்­பட்டு குழந்­தையை தேடும் பணிகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

இதனால் வைத்­தி­ய­சா­லையில் பர­ப­ரப்பு ஏற்­பட்டு சிசுவைத் தேடி­ய­போ­திலும் சிசு இன்­மையால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்­தன.

இந் நிலையில் அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு சிசு ஒன்­றினை யுவ­தி­யொ­ருவர் மருத்­துவ சிகிச்­சைக்­காக கொண்­டு­வந்­துள்ள நிலையில்  அங்­கி­ருந்த வைத்­தி­யர்கள் மற்றும் தாதி­யர்கள் சிசுவைக் கொண்டு வந்­தவர் மேல் சந்­தேகம் கொண்டு அவரை மருத்­துவப் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தினர்.

இத­னை­ய­டுத்து சிசுவைக் கொண்டு வந்த தாயார் சிசுவை பெற்­ற­மைக்­கான சான்­றுகள் இன்­மை­யாலும் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் சிசு காணாமல் போன செய்தி கிடைக்­கப்­பெற்­ற­மை­யி­னாலும் அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் இருந்து வவு­னியா பொலி­ஸா­ருக்கும் வைத்­தி­ய­சா­லைக்கும் தகவல் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து தந்­தையை பொலிஸார் அனு­ரா­த­பு­ரத்­திற்கு அழைத்து சென்­ற­துடன் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் தாயாரே குழந்­தையை விற்­றுள்­ள­தாக கிடைத்த தக­வ­லுக்­க­மைய தாயாரை வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் வைத்து பொலிஸார் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்து வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதே­வேளை சிசுவை மர­பணு பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்த வேண்­டிய தேவை­யுள்­ள­மை­யினால் அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையின் பரா­ம­ரிப்பில் சிசு உள்­ளது. சிசுவை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு வந்த 21 வய­து­டைய யுவ­தியை கைது செய்த வவு­னியா பொலிஸார் அவ­ரிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதன் பிர­காரம் குறித்த யுவதி திரு­ம­ண­மாகி குழந்­தைகள் இல்­லாத நிலையில் குடும்­பத்­தி­ன­ருடன் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­தா­கவும், இதன் கார­ண­மாக தான் கர்ப்­ப­ம­டைந்­துள்­ளது போல் பாசாங்கு செய்து வவு­னியா வைத்­தி­ய­சா­லையின் மகப்­பேற்று விடு­தியில் இருந்து குழந்­தை­யொன்றை எடுத்­துச்­செல்லும் நோக்­குடன் வந்­துள்ளார்.

இவர் விடுதிக்குள் நுழைந்­த­போது குறித்த சிசுவே தாய் இல்­லாத நிலையில் காணப்­பட்­டுள்­ளது. எனவே அந்தச் சிசுவை எடுத்­துச்­செல்­வது இல­கு­வாக இருந்­த­மை­யினால் சிசுவை எடுத்து அனுராதபுரத்திற்கு சென் றுள்ளார்.

எனினும் சிசுவுக்கு உடல்நலம் சீரின்மையை அவதானித்த குறித்த யுவதி அனுராதபுரம் வைத்தி யசாலைக்கு சிசுவை சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் அவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிசுவின் தாயாரை பொலிஸார் விடு வித்துள்ளனர்.