வவுனியா ஒமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியினை ஓமந்தை பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் வழிமறித்து தகாத வார்த்தைப்பிரயோகங்களினால் பேசியதுடன் தாக்குதல் மேற்கொள்ளுவதற்கும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது முச்சக்கரவண்டி சாரதி முச்சக்கரவண்டியினை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்றார். இதனையடுத்து  குறித்த இரு இளைஞர்களும் முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையில் அச்சமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியினை ஓமந்தை மருதங்குளத்தில் உள்ள அவரது அம்மம்மாவின் வீட்டிற்கு முன்பாக தரித்து நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.

குறித்த நபரை பழிவாங்கும் எண்ணத்தில் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்களும் முச்சக்கரவண்டியினை தீ வைத்து எரித்து விட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

தீயில் எரிந்த முச்சக்கரவண்டியினை முச்சக்கரவண்டியின் உரிமையாளரும் அயலவர்களும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

adddகுறித்த விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் சுமார் இரண்டு மணித்தியாலயத்தின் பின்னரே சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் முச்சக்கரவண்டியினை தீயிட்டு கொழுத்தியவர்களை முச்சக்கரவண்டியின் உரிமையாளர் அடையாளம் காட்டியுள்ள போதிலும் இதுவரையில் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.