ilakkiyainfo

வாகரை கடலில் பிடிக்கும் மீன்களை கடலில் கொட்டும் அவலம் (படங்கள்)

வாகரை கடலில் பிடிக்கும் மீன்களை கடலில் கொட்டும் அவலம் (படங்கள்)
September 26
20:19 2016

மட்டக்களப்பு வாகரை மாங்கேணி கடலில் சாளச் சூடை எனப்படும் மீன்கள் அதிகளவு பிடிபடுவதனால் இதன் விற்பனை விலையில் வீழ்ச்சி காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது இதன் விலை கிலோ 20 ரூபாவிற்கு விற்பனையாகிறது. அத்துடன் சில மீனவர்கள் இதனை விற்பனை செய்ய முடியாமல் அவற்றினை காகம் மற்றும் நாய்களுக்கு உணவாக வழங்கியதுடன் கடலிலும் கொட்டும் நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஒரு தடவை கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு ரூபா 1500 மண்ணெண்ணெய் செலவாகிறது என்றும், தற்போது இவ் மீன் இனமே அதிகளவு பிடிபடுவதனால் வியாபாரிகள் அதனை கொள்வனவு செய்வதில் விருப்பம் காட்டுவதாகவில்லை.

என்றும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இங்கு பல தரப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்ட போதிலும் கீரி மீன்கள், சீலா மீன்கள், நுகர மீன்கள் சூடை மீன்கள் மற்றும் சாளச் சூடை மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன.

தற்போது கீரி மீனின் விலை ஒரு கிலோ 200 ருபாவும், நுகர மீன்கள் ஒரு கிலோ 80 ருபாவும் என விற்பனையாகிறது. இனி வரும் மாதங்களில் கீரி மீனின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதேபோன்று கடந்த வருடம் கீரி மீன் கிலோ 20 ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளோம் என்கின்றனர்.

இதில் வியாபாரிகளே அதிகளவு நன்மை பெறுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

51-753-452-5

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com