ilakkiyainfo

வானில் தோன்றும் அதிசயம்! இன்று இலங்கையர்களுக்கு பார்க்கும் வாய்ப்புண்டா?

வானில் தோன்றும் அதிசயம்! இன்று இலங்கையர்களுக்கு பார்க்கும் வாய்ப்புண்டா?
November 14
03:12 2016

1948ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று வானில் ஒரு அதிசயம் நிகழப் போவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பூரண சந்திர தினமான இன்று சுப்பர் மூன் என்ற மிகப் பெரிய சந்திரனை அவதானிக்கலாம் என இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

68 வருடங்களின் பின், பூமியில் இருந்தவாறு அவதானிக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சந்திரனை வெற்றுக் கண்களால் அவதானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சாதாரணமான சந்திரனின் தோற்றத்திலும் பார்க்க 14% பெரிய சந்திரனை அவதானிக்கலாம் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30% அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948 இல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நிகழ்வு இன்னும் 18 வருடங்களின் பின்னர் எதிர்வரும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதியில் தெளிவான சந்திரனை காணும் வாய்ப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சந்திரன் சுற்றி வருகிறது,

சந்திரன் பூமியை சுற்றிவரும் போது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48,000 கிலோமீட்டர் அருகில் செல்லும். இதன்போதே பெரிய சந்திரன் தெரியும் துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Editor

Editor

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com