Site icon ilakkiyainfo

வானில் நடக்கும் விபரீதங்கள்!!

”2014 ஆம் ஆண்டு மலே­ஷி­யா­வுக்கு சாபக் கேடான ஆண்­டாக அமைந்­துள்­ளது” இவ்­வாறு கடந்­த­வாரம் மலே­ஷிய பிர­தமர் நஜீப் அப்துல் ரஸ்ஸாக் தெரி­வித்­தி­ருந்தார்.

எம்.எச்.17 என்ற மலே­ஷிய விமான நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான பய­ணிகள் விமானம் ஒன்று கடந்­த­வாரம் கிழக்கு உக்ரேன் பகு­தியில் ஏவு­கணை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­ய­தை­ய­டுத்தே மலே­ஷிய பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

மலே­ஷிய பிர­தமர் மட்­டு­மல்ல அண்­மைக்­கா­ல­மாக தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வரும் விமான விபத்­துக்கள் முழு உல­கத்­தையும் ஒரு கணம் அதிர்ச்­சி­ய­டைய வைத்­துள்­ளது.

2014 ஆம் ஆண்டு என்­பது உல­கத்தின் விமான சேவை­க­ளுக்கு துர­திர்ஷ்­ட­வ­ச­மான ஆண்­டாக அமைந்­துள்­ளதா என்று எண்­ணத்­தோன்றும் வகை­யி­லேயே அண்­மைய விமான விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளன.

நேற்று முன்­தினம் அல்­ஜீ­ரி­யாவில் இடம்­பெற்ற விமான விபத்­துடன் பலர் அதிர்ச்சி வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றனர். உல­கத்தில் என்ன நடக்­கின்­றது? விமானங்க­ளுக்கு என்ன நடக்­கின்­றன ? தொடர்ச்­சி­யாக கோர­வி­பத்­துக்கள் எவ்­வாறு இடம்­பெ­று­கின்­றன ? என்ற வாச­கங்­க­ளையே சமூக வலைத்­த­ளங்­களில் காணமுடி­கின்­றது.

பல்­வேறு நாடு­க­ளுக்கு செல்லும் நோக்கில் பய­ணிகள் பல கன­வு­க­ளு­ட­னேயே விமானப் பய­ணங்­களை மேற்­கொள்­கின்­றனர். மற்­று­மொரு நாட்டின் மண்ணை மிதிக்கும் எதிர்­பார்ப்­பு­ட­னேயே பய­ணிகள் செல்­கின்­றனர். கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி காணாமல் போன மலே­ஷிய விமா­னத்தில் 239 பேர் இருந்­தனர்.

அதன் பின்னர் கிழக்கு உக்­ரேனில் தாக்­கு­த­லுக்கு உள்­ளான மலே­ஷிய விமா­னத்தில் 298 பேர் உயி­ரி­ழந்­தனர். கடந்த புதன்­கி­ழமை தாய்­வானில் அவ­ச­ர­மாக தறை­யி­றக்­கப்­பட்ட விமானம் ஒன்று விபத்­துக்கு உள்­ளா­னதில் 51 பேர் பலி­யானார்கள். இறு­தி­யாக அல்­ஜீ­ரி­யாவில் விபத்­துக்­குள்­ளான விமா­னத்தில் 116 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

தற்­போ­தைய நவீன தொழில்­நுட்­பங்கள் அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கால­கட்­டத்தில் விமானப் பய­ணங்­களும் அதி­ந­வீன தொழில்­நுட்பவசதிகளுடனேயே இடம்­பெ­று­கின்­றன. ஆனாலும் அவை எல்­லா­வற்­றையும் மீறி இந்த விபத்­துக்கள் இடம்­பெற்­று­வி­டு­கின்­றன.

கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி அதி­காலை 1 மணி­ய­ளவில் மலே­ஷி­யாவின் கோலா­லம்பூர் நக­ரி­லி­ருந்து பீஜிங் நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்த மலே­ஷிய விமான சேவை நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான எம்.எச். 370 விமானம் வியட்னாம் எல்லைப் பகு­தியில் வைத்து காணாமல் போனது.

அந்த விமா­னத்­துக்கு என்ன நடந்­தது என்­ப­தற்கு இது­வரை பதில் கிடைக்­கா­ம­லேயே உள்­ளது. விமா­னத்தை தேடும் பணி­களில் அதி நவீன முறை­களில் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டும் விமா­னத்­துக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிய முடி­ய­வில்லை.

பிரிட்­டனும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் விமா­னத்தை தேடும் பாரிய முயற்­சி­களை மேற்­கொண்­டன. எனினும் பலன் கிடைக்­க­வில்லை. அவுஸ்­தி­ரே­லியா இந்து சமுத்­தி­ரத்தில் பாரிய தேடு­தல்­களை மேற்­கொண்­ட­போதும் ஒரு துரும்பு கூட கிடைக்­க­வில்லை. அந்­த­வ­கையில் 239 பேருடன் சென்ற மலே­ஷி­யாவின் எம்.எச். 370 விமா­னத்­துக்கு என்ன நடந்­தது என்­பது இது­வரை புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

அத­னை­ய­டுத்து இம்­மாதம் 17 ஆம் திகதி நெதர்­லாந்தின் அம்ஸ்­டர்டேம் விமான நிலை­யத்­தி­லி­ருந்து மலே­ஷியா நோக்கி பறந்து வந்த எம்.எச். 17 என்ற பய­ணிகள் விமானம் கிழக்கு உக்ரேன் பகு­தியில் ஏவு­கணை தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது. இதன்­போது விமா­னத்தில் இருந்த 298 பேரும் பரி­தா­பக­ர­­மாக பலியா­கினர்.

கிழக்கு உக்­ரேனில் உள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்­க­ளினால் இந்த விமானம் வீழ்த்­தப்­பட்­ட­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­வ­துடன் உலக நாடுகள் இதற்கு கடும் கண்­ட­னத்­தையும் தெரி­வித்­துள்­ளன. அந்­த­வ­கையில் கிழக்கு உக்­ரேனின் வான் பகு­தியில் விமா­னங்­களை செலுத்­த­வேண்டாம் என்று தற்­போது கூறப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றெ­னினும் இந்த சம்­ப­வத்தில் பரி­தா­ப­க­ர­மான நிலையில் 298 உயிர்கள் காவு கொள்­ளப்­பட்­டு­விட்­டன. இதற்கு பின்­னரும் இவ்­வா­றான கோர சம்பவங்கள் இடம்­பெ­றாமல் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது சம்பந்­தப்­பட்ட தரப்­பி­னரின் கட­மை­யாகும். இது இவ்­வாறு இருக்க கடந்த புதன்­கி­ழமை தாய்­வானில் பய­ணிகள் விமானம் ஒன்று விபத்­துக்­குள்­ளா­னதில் 51 பேர் உயி­ரி­ழந்­தனர்.

தாய்­வானின் உள்ளூர் விமான சேவைக்கு சொந்­த­மான விமானம் ஒன்று பெங்கு விமான நிலை­யத்தில் அவ­ச­ர­மாக தறை­யி­றக்­கப்­பட்­ட­போதே இந்த விபத்து நேர்ந்­துள்­ளது.

சீரற்ற கால­நிலை கார­ண­மா­கவே குறித்த விமானம் அவ­ச­ர­மாக தறை­யி­றக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன்­போதே விபத்து நிகழ்ந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் அல்­ஜீ­ரி­யாவின் ஏ.எச்.5017 என்ற விமானம் மேற்கு ஆப்­பி­ரிக்க நாடான பர்­கினா பசோவின் தலை­நகர் ஒக­டா­கோவில் இருந்து அல்­ஜியர்ஸ் நோக்கி பறந்­த­போது காணாமல் போனது.

பின்னர் இந்த விமானம் விபத்­துக்­குள்­ளா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. இதில் பய­ணித்த 116 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். விமானம் கிளம்­பிய 50 ஆவது நிமிடத்தில்  ராடரில் இருந்து விமானம் மறைந்­து­விட்­டது. இதை அடுத்து அவ­ச­ர­கால நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்டு, விமா­னத்தை தேடும் பணியில் அதி­கா­ரிகள் ஈடு­பட்­டனர். இந்­நி­லையில் விமா­னத்தின் சிதைந்த பாகங்கள் தங்கள் நாட்டில் கிடைத்திருப்பதாக மாலி அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பார்க்கும்போது 2014 ஆம் ஆண்டு விமானப் பயணங்களுக்கு துரதிர்ஷ்டவசமான காலமோ என எண்ணத்தோன்றுகின்றது. இந்த மாதத்தில் மட்டும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

பயணிகளை கதி கலங்க வைத்துள்ள இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப் பட்டு இதற்கு பின்னர் இவ்வாறான கோர விபத்துக்கள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.

Exit mobile version