இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் வாள் வெட்டு குழுவின் தலைவர் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேக் வெட்டுவதற்கு இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மருதனார்மடம் பகுதியில் வைத்து 26 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 8 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.