ilakkiyainfo

விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள்!!- என். கண்ணன்

விக்னேஸ்வரனின் கூட்டணி: காத்திருக்கும் சவால்கள்!!- என். கண்ணன்
April 22
12:54 2018

வடக்கு மாகாண சபையின் ஆயுட்­காலம் சுருங்கத் தொடங்க, தமிழ்த் தேசிய அர­சி­யலில் பர­ப­ரப்புத் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ஏனென்றால், வடக்கு மாகாண சபைக்­கான தேர்தல் பர­வ­லாக எதிர்­பார்ப்­புக்­கு­ரி­ய­தொன்­றாக மாறி­யி­ருக்­கி­றது.

வடக்கு மாகாண சபையில் ஆட்­சி­ய­மைக்கப் போவது யார் என்­பது, இலங்­கையில் மாத்­தி­ர­மன்றி, வெளி­யு­ல­கி­னாலும் உன்­னிப்­பாக அவதா­னிக்­கப்­ப­டு­கின்ற விடயம். ஏனென்றால், வடக்­குடன் பல்­வேறு நாடுகள் பல்­வேறு தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கின்­றன.

இலங்­கையின் ஏனைய 8 மாகா­ணங்­க­ளையும் விட வடக்கின் மீது தான் சர்­வ­தேச கவனம் குவிந்­தி­ருக்­கி­றது.

வடக்கு மாகா­ண­சபை அமைக்­கப்­பட்ட பின்னர், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருடன்- உலகின் முக்­கி­ய­மான நாடு­களின் பிர­த­மர்கள், வெளி­வி­வ­கார அமைச்­சர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தூது­வர்கள் எனப் பல­த­ரப்­பட்­ட­வர்­களும் வந்து சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

இது­போன்று வேறெந்த மாகா­ணத்­துக்கும் சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் கிடைத்­தது இல்லை.

இத்­த­கைய நிலையில் வடக்கு மாகா­ண­ச­பையில், அடுத்து ஆட்­சி­ய­மைக்கப் போவது யார் என்ற கேள்வி இப்­போதே எழுந்­தி­ருப்­பதில் ஆச்ச­ரியம் ஏது­மில்லை.

கடந்த 2013 ஆம் ஆண்டு, வடக்கு மாகா­ண­ச­பைக்கு முதன்­மு­த­லாகத் தேர்தல் நடத்­தப்­பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி என, தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தி அர­சியல் செய்யும் இரண்டு கட்­சிகள் தான் அரங்கில் இருந்­தன.

ஆனாலும், மாகாண சபை­களை தாம் ஏற்றுக் கொள்­ள­வில்லை என்­பதால், அதற்­கான தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஒதுங்கிக் கொண்­டது.

indexஇதனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மாத்­தி­ரமே, அப்­போ­தி­ருந்த மஹிந்த – டக்ளஸ் கூட்­ட­ணி­யுடன் வலு­வாக மோதி­யது. அதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மிகப்­பெ­ரிய வெற்­றி­யையும் பெற்­றது.

ஆனால், இப்­போது தமிழ்த் தேசி­யத்தின் பெயரால் அர­சியல் நடத்தும் மூன்று அணிகள் அர­சியல் அரங்கில் இருக்­கின்­றன. இவை மூன்றும் மாகா­ண­சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் முடி­வு­டனும் இருக்­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஆகி­ய­வற்­றுடன், ஈபி­ஆர்­எல்எவ்- தமிழர் விடு­தலைக் கூட்­டணி இணைந்து அமைத்த தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு ஆகி­ய­னவே அவை.

இந்த மூன்று அணிக­ளுடன், இன்­னொரு தமிழ்த் தேசிய அர­சியல் அணியும் களத்தில் குதிக்கும் வாய்ப்­புகள் தென்­ப­டு­கின்­றன. அது தான் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வ­ரனின் கூட்­டணி.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விரிசல் கிட்­டத்­தட்ட ஒட்ட வைக்க முடி­யா­த­ள­வுக்கு சென்று விட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இப்­போது முன்­னைய கொள்­கை­க­ளுடன் இல்லை என்றும், அப்­ப­டி­யி­ருக்கும் போது, தனக்கு எப்­படி மீண்டும் போட்­டி­யிட  அங்­கி­ருந்து அழைப்பு வரும் என்றும் கேள்வி எழுப்பி – ‘முற்­றுப்­புள்ளி வைக்கும்’ அள­வுக்கு கருத்தை வெளியிட்டிருக்­கிறார் விக்­னேஸ்­வரன்.

அது­மாத்­தி­ர­மன்றி, வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், புதிய கட்சி ஒன்றை ஆரம்­பித்து போட்­டி­யி­டு­வது அல்­லது புதிய கூட்­டணி ஒன்றை அமைத்துப் போட்­டி­யி­டு­வது என்ற யோச­னைகள் தம் முன் இருப்­ப­தையும் அவர் நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

தற்­போ­தைக்கு அவர், மாகா­ண­சபைத் தேர்­த­லுக்­காக புதி­ய­தொரு அர­சியல் கூட்­ட­ணியை உரு­வாக்கக் கூடும்.

அவ்­வா­றாயின், தமிழ்த் தேசிய அர­சியல் நடத்தும் அணிகள் நான்­காக அதி­க­ரிக்­கலாம். அதே­வேளை, முத­ல­மைச்சர் விக்னேஸ்வரனுடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும், தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பும் இணைந்து போட்­டி­யிடும் வாய்ப்புகள் இல்லை என்று நிரா­க­ரிக்க முடி­யாது.

அர­சியல் ரீதி­யாக இது சாத்­தி­ய­மா­கலாம். ஆனால் கொள்கை ரீதி­யாக இது சாத்­தி­யப்­ப­டுமா என்­பது சிக்­க­லான கேள்வி. ஏனென்றால், விக்­னேஸ்­வரன் தனது பிந்­திய அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்ள  “நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட- ஒழுக்கம் சார்ந்த அர­சி­யலை முன்னெடுப்­பது” என்ற விடயம், அவ­ரது கூட்­ட­ணியை பரந்­து­பட்ட ஒன்­றாக உரு­வாக்­குமா என்ற சந்­தே­கத்தை எழுப்­பு­கி­றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் ஏற்­க­னவே தமிழ் மக்கள் பேர­வையில் விக்­னேஸ்­வ­ரனின் தலை­மையை ஏற்றுக் கொண்­டவை.

625.500.560.350.160.300.053.800.900.160.90ஆனாலும், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும், அத­னை­ய­டுத்தும் இந்தக் கட்­சி­களின் செயற்­பா­டுகள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எதிர்­பார்க்­கின்ற ஒழுக்கம் சார்ந்த அர­சி­ய­லுக்கு ஏற்­பு­டை­யது என்று கூற முடி­யாது.

அர­சியல் என்­பது சந்­தர்ப்­ப­வாதக் கூட்டு என்ற கருத்தை மெய்ப்­பிக்கும் வகையில் தான், உள்­ளூ­ராட்சி சபை­களில் ஒவ்­வொரு தமிழ்த் தேசியக் கட்­சி­களும் நடந்து கொண்­டன.

இதில் எந்தக் கட்­சியும் எந்தக் கட்­சி­யையும் பார்த்து விமர்­சிக்­கின்ற தகுதி கிடை­யாது. அந்­த­ள­வுக்கு உள்­ளூ­ராட்­சி­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக, தமது நிலையில் இருந்து தரம் தாழ்ந்து போயின.

எனவே, விக்­னேஸ்­வரன் ஒரு முறை­யான ஒழுக்கம் சார்ந்த அர­சியல் பாதையை வகுக்க முற்­ப­டு­வா­ரானால், இப்­போ­துள்ள எந்த தமிழ்த் தேசியக் கட்­சி­யையும் அவரால் அர­வ­ணைக்க முடி­யாது.

அவ்­வாறு அர­வ­ணைப்­பா­ரே­யானால், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பார்த்து எத்­த­கைய விமர்சனங்­களை அவர் முன்­வைத்­தாரோ, அதே விமர்­ச­னங்­களைக் கொண்ட கட்­சி­க­ளுடன் தாமும் கூட்­டணி வைப்­ப­தற்­காக வெட்­கப்­பட நேரிடும்.

அது அவ­ரது அர­சியல் அறத்­தையும், நேர்­மை­யையும் கூட கேள்­விக்­குட்­ப­டுத்தும்.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தலை­மைத்­து­வத்தை ஏற்றுக் கொள்ளத் தயா­ரா­கவே இருந்­தது. அதற்­கான சமிக்­ஞை­களை பகி­ரங்­க­மா­கவே வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்.

ஆனால், இப்­போ­தைய நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி அவரை மாற்றுத் தலை­மை­யாக, ஏற்றுக் கொண்டு அவ­ருக்குக் கீழ் அணி திரளத் தயா­ராக இருக்­கி­றதா என்­பதில் நிறை­யவே சந்­தே­கங்கள் உள்­ளன.

அதற்குப் பல கார­ணங்கள் இருக்­கின்­றன. முத­லா­வது, எலி கொழுத்தால் வளையில் தங்­காது என்­பார்கள். உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வாக்­கு­களை தன்­பக்கம் இழுத்து, வடக்கில்- குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்தில், ஒரு பல­மான சக்தியாக தன்னை நிரூ­பித்­தி­ருக்­கி­றது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி.

gajendrakumarதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி­யாக தன்னைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இந்த அணி தயார்­ப­டுத்­தல்­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

இப்­ப­டி­யான நிலையில், மீண்டும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தலை­மைத்­து­வத்தின் கீழ் செல்­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தயா­ரா­குமா என்று தெரி­ய­வில்லை.

அது­போ­லவே, இந்­தி­யா­வு­ட­னான உற­வுகள் விட­யத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் முரண்­பா­டுகள் இருக்­கின்­றன.

கடை­சி­யாக நடந்த தமிழ் மக்கள் பேர­வையின் கூட்­டத்தில் கூட விக்­னேஸ்­வரன் அதனைத் தெளி­வாகக் கூறி­யி­ருந்தார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இந்­திய சார்பு நிலையை விரும்­பு­வ­தாக அவ­ரது அண்­மைய கருத்­துக்கள் உணர்த்­து­கின்­றன. ஆனால், இந்­தி­யாவை விட்டு சீனாவை நம்ப வேண்டும் என்ற தொனியில் செயற்­ப­டு­கி­றது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி.

இந்­த­நி­லையில், கொள்கை சார் கூட்டு ஒன்றை உரு­வாக்க முனையும் போது, இந்த விடயம் இடிக்கும்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தேர்தல் வெற்­றிக்­காக ஓர் அர­சியல் கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வ­தானால், அதில் எந்தக் கட்­சி­யையும் இணைத்துக் கொள்­ளலாம். அதில் தவறு இல்லை.

ஆனால் அவரோ, கொள்கை ரீதி­யாக ஒன்­று­பட்ட கட்­சி­களை ஒன்­றி­ணைப்­பது பற்றி பேசு­கிறார், ஒழுக்­கம்­சார்ந்த அர­சியல் அணி ஒன்றைப் பற்றிப் பேசு­கிறார்.

அப்­ப­டிப்­பட்ட நிலையில் அவர் சாதா­ர­ண­மான- தேர்தல் வெற்­றிக்­கான ஓர் அர­சியல் கூட்­ட­ணியை அமைக்க முனைந்தால், அவ­ரது நிலையும் தாழ்ந்து போகும்.

அடுத்து நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட அர­சியல் பற்றி அவர் கூறி­யி­ருக்­கிறார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பதிவு செய்­யாமல் இருப்­பது பற்றி அவர் விமர்­சித்­தி­ருக்­கிறார். கூட்­ட­மைப்­புக்குள் சர்­வா­தி­கா­ரத்­தனம் மேலோங்­கி­யி­ருப்­ப­தா­கவும் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

இத்­த­கைய நிலையில், நிறு­வன மயப்­ப­டுத்­தப்­பட்ட ஓர் அர­சி­யலை அவர் முன்­னெ­டுக்க முனையும் போது, அவர் உரு­வாக்க நினைக்கும் கூட்­ட­ணியை பதிவு செய்து கொள்­வாரா என்ற கேள்வி உள்­ளது.

அவ்­வாறு பதிவு செய்­யப்­படும் போது, அதில் இணையும் கட்­சிகள் தமது அர­சியல் அடை­யா­ளங்கள் அனைத்­தையும் கைவிடத் தயா­ராக இருக்­கின்­ற­னவா என்ற கேள்­வியும் உள்­ளது.

உண்­மையைச் சொல்­லப்­போனால், தமிழ்த் தேசி­யத்தை வைத்து அர­சியல் நடத்தும் எந்தக் கட்­சி­யுமே, தமது தனித்­துவ அர­சியல் அடை­யா­ளத்தை தொலைப்­ப­தற்குத் தயா­ராக இல்லை. அதனைத் தொலைத்து விட்டு இன்­னொரு கூட்­ட­ணிக்குள் அடைக்­கலம் தேடிக் கொள்ளப் போவ­தில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவ்வாறு ஒன்றிணைந்திருந்தார்களோ, அதுபோலத் தான் இணைந்திருக்கப் போகிறார்கள். அவ்வாறான நிலையில் விக்னேஸ்வரன் எதிர்பார்க்கும் நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் எந்தளவுக்குச் சாத்தியமாகும்?

இப்படியான சிக்கல்கள் உள்ள சூழலில், வடக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறு அணுகப் போகின்றன? என்பது அதிகம் எதிர்பார்ப்புக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.

நிச்சயமாக ஒரே அணியாக இவை இணையப் போவதில்லை. குறைந்தது இரண்டு அணியாகப் போட்டியிடலாம். சிலவேளைகளில் மூன்று, நான்கு அணிகளாகவும் பிரிந்து நிற்கலாம்.

இப்படியான நிலையில், பேரினவாதக் கட்சிகளும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கட்சிகளும் மேலும் பலம் பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

உள்ளூராட்சி சபைகளில் தமது கண்ணைத் தாமே குத்திக் கொண்டது போலத் தான், தமிழ்த் தேசியக் கட்சிகள் செயற்படத் தயாராகின்றன போலவே தெரிகிறது.

-என். கண்ணன்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com