ilakkiyainfo

விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது.

விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது.
August 09
07:07 2015

பாரா­ளு­மன்றத் தேர்தல் பிர­சா­ரங்­களில், விடு­தலைப் புலி­களை வைத்து அர­சியல் பிழைப்பு நடத்­து­வது, தெற்கில் மட்­டு­மன்றி, வடக்­கிலும் வாடிக்­கை­யாகி விட்­டது.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விடு­தலைப் புலி­க­ளையும், அதன் தலைவர் வே.பிர­பா­க­ர­னையும், தமது பிர­சா­ரத்­துக்குப் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

ஆனால், இம்­முறை பாரா­ளு­மன்றத் தேர்­தலில், விடு­தலைப் புலிகள், அதன் தலைவர் வே.பிர­பா­க­ரனை நம்பித்தான் பல அர­சியல் கட்­சிகள் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றன.

சிங்­களக் கட்­சி­களும் அதற்கு விதி­வி­லக்­கா­னவை அல்ல. கொள்கை ரீதி­யா­கவோ, வேறு வழி­மு­றை­க ளின் ஊடா­கவோ, தமிழ் மக்­களின் வாக்­கு­களை தம்மால் கவர முடி­யாது என்­று­ணர்ந்த, கட்­சிகள் தமது கடைசி ஆயு­ த­மாக விடு­தலைப் புலி­க­ளையும், பிர­பா­க­ர­னையும் கையில் எடுத்­தி­ருக்­கி­றார்கள்.

அர­சியல் கட்­சி­களால் மட்டும் தான் இதனைக் கையில் எடுக்க முடி­யுமா என்று, ஜன­நா­யகப் போரா­ளிகள் என்ற, முன்­னைய விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களும் கூட, போட்­டிக்குக் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றனர்.

இப்­போது போட்டி என்­ன­வென்றால், யார் புலி­களை அதி­க­மாகத் தூக்கிப் பிடிப்­பது,- பிர­பா­க­ரனின் பெயரைக் கூறி கூட்­டத்தில் அதிக கைதட்டல் வாங்­கு­வது என்­பது தான்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்கை வெளி­யி­டப்­பட்ட மரு­த­னார்­மடக் கூட்­டத்தில், பிர­பா­க­ரனின் பெயர் தாரா­ள­மாக உச்­ச­ரிக்­கப்­பட்­டது. அப்­போது கர­வொ­லியும் வானைப் பிளந்து கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு உற்­சா­கத்தைக் கொடுத்­தது.

அதைப் பார்த்த, கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அர­சியல் செய்யக் கிளம்­பி­யுள்­ள­வர்­க­ளெல்லாம், பிர­பா­க­ர­னையும், விடு­தலைப் புலி­க­ளையும், தாரா­ள­மா­கவே தலையில் வைத்துக் கொண்­டா­டு­கின்­றனர்.

போர் நடந்து கொண்­டி­ருந்த போது, புலி­களைத் திட்டித் தீர்த்து,- பக்கம் பக்­க­மாக அறிக்­கை­களை வெளி­யிட்டு-, மக்­களை கேட­ய­மாகப் பிர­பா­கரன் பயன்­ப­டுத்­து­வ­தாக தூஷித்த, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு வெளி­யிட்­ட­வர்­க­ளுக்குக் கூட, இப்­போது பிர­பா­க­ரனும், விடு­தலைப் புலி­களும் தேவைப்­ப­டு­கின்­றனர்.

இதன் மூலம் விடு­தலைப் புலி­களும், அதன் தலை­மையும் தமிழ் மக்­க­ளிடம் எந்­த­ள­வுக்கு செல்­வாக்குப் பெற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர் என்­பதை உணர முடி­கி­றது.

விடு­தலைப் புலி­களை வைத்து எந்­த­ள­வுக்­கெல்லாம் அர­சியல் நடத்த முடி­யுமோ அந்­த­ள­வுக்கு அர­சியல் நடத்­தப்­ப­டு­கி­றது.

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் அர­சியல் பிர­வே­சத்தை அறி­வித்த, – சுது­மலை அம்மன் கோவில் முற்­றத்தில் வைத்து, ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி தமது தேர்தல் அறிக்­கையை வெளி­யிட்­ட­தாக சில நாட்­க­ளுக்கு முன்னர் ஒரு செய்­தியைப் படிக்க முடிந்­தது.

அந்தச் செய்­தியை கொடுத்­த­வர்­களோ, எழு­தி­ய­வரோ, பிர­சு­ரித்­த­வரோ வர­லாறு தெரி­யா­த­வர்­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றனர்.

எப்­போது பிர­பா­கரன் தனது அர­சியல் பிர­வே­சத்தை அறி­வித்தார்?

புது­டில்­லியில் வைத்து வட­கி­ழக்கு மாகாண முத­ல­மைச்சர் பத­வியை தரு­வ­தாகக் கூறப்­பட்­ட­தா­கவும் அதனை நிரா­க­ரித்து விட்­ட­தா­கவும், 1987 ஆம் ஆண்டு இந்­திய, – இலங்கை உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­ட­தை­ய­டுத்து யாழ்ப்­பாணம் திரும்­பிய பிர­பா­கரன் கூறி­யி­ருந்தார்.

அது­மட்­டுல்ல, தான் ஒரு­போதும் முத­ல­மைச்சர் பத­வியை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும், ஒரு­போதும் அர­சி­ய­லுக்கு வர­மாட்டேன் என்றும் அவர் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருந்தார். அவ­ரது இந்தப் பேட்டி அடங்­கிய வீடியோ ஆதா­ரத்தை இப்­போதும் இணை­யங்­களில் பார்­வை­யி­டலாம்.

அப்­ப­டி­யி­ருக்க, பிர­பா­கரன் அர­சியல் பிர­வே­சத்தை அறி­வித்த சுது­ம­லையில் தேர்தல் அறிக்­கையை வெளி­யிட்­ட­தாக பிர­பலம் தேடிக் கொள்­கின்­றனர் இவர்கள்.

முன்னர் ஒரு­முறை விடு­தலைப் புலி­களின் கொள்­கையை முற்­று­மு­ழு­தாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்று, பகி­ரங்­க­மாக கூறி­யி­ருந்தார் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர்.

ஆனால் இன்று, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தாம் விடு­தலைப் புலி­களை எப்­போ­துமே ஆத­ரித்தோம், அவர்­களின் போராட்­டத்­துக்கு துணை நின்றோம் என்று வாக்குக் கேட்­கி­றது.

முள்­ளி­வாய்க்­காலில் தங்­க­ளி­டமே போராட்டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­கவும் அதனை முன்­னெ­டுத்துச் செல்ல ஆணை தாருங்கள் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் வாக்கு கேட்­கின்­றனர்.

முள்­ளி­வாய்க்­காலில், விடு­தலைப் புலி­களின் தலைமை முற்­று­மு­ழு­தாக அழிக்­கப்­பட்ட போது, அங்­கி­ருந்து அதனைப் பொறுப்­பேற்ற இவர்­களில் எத்­தனை பேர் அங்­கி­ருந்­தார்கள்?

அந்தக் கட்­டத்தில் நாட்டை விட்டு ஓடி வெளி­நா­டு­களில் பதுங்­கி­யி­ருந்­த­வர்கள் தான் இப்­போது தங்­க­ளிடம் போராட்டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாகக் கூறு­கின்­றனர்.

அது­மட்­டு­மல்ல, முள்­ளி­வாய்க்­காலில் போராட்டம் கையில் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக கூறு­ப­வர்­களில் எத்­தனை பேர்? ஏன் அது தம் கையில் வந்­தது? அது­வரை போராட்­டத்­துக்கு தலை­மை­யேற்ற விடு­தலைப் புலி­களின் தலை­மைக்கு என்ன நடந்­தது? என்று கூறத் தயா­ராக இருக்­கின்­றனர்?

இவர்­களில் எவ­ரா­வது போராட்­டத்தை தமது கையில் கொடுத்­த­வ­ருக்கு என்ன நேர்ந்­தது என்று வெளிப்­ப­டை­யாகக் கூறி, அவ­ருக்­காக அஞ்­சலி செலுத்த முன்­வந்­தி­ருப்­பார்­களா?

இல்லை-. அதைச் செய்யும் துணிவும் திரா­ணியும் அவர்­களில் யாரி­டமும் கிடை­யாது.

ஆனால், விடு­தலைப் புலி­களின் பெயரில் பெறும் வாக்­குகள் மட்டும் தேவைப்­ப­டு­கி­றது.

இப்­போது பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் ஊடாக, பாரா­ளு­மன்ற ஆச­னங்­க­ளுக்­காக அலை­ப­வர்­க­ளெல்லாம், பிர­பா­கரன் கூறிய “போராட்ட வடி­வங்கள் மாறலாம், ஆனால் இலட்­சியம் மாறாது” என்ற வச­னத்தை தூக்கிப் பிடித்துக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

பிர­பா­கரன் தனது போராட்ட வடி­வத்தை தான் குறிப்­பிட்­டாரே, தவிர இவர்­களின் போராட்­டத்தைக் குறிப்­பி­ட­வில்லை.

அவர் தனது இலட்­சி­யத்தின் அடிப்­ப­டையில் தான் அதனைக் குறிப்­பிட்டார்.

பிர­பா­க­ரனின் இலட்­சி­யமும், அவரை வைத்து வாக்கு வேட்­டை­யா­டு­ப­வர்­களின் இலட்­சி­யமும் ஒன்­றல்ல.

பிர­பா­க­ரனின் இலட்­சியம் தமி­ழீ­ழத்தை அடை­வது.

ஆனால் இன்­றுள்ள ஒரு கட்­சிக்கும் அந்த இலட்­சியம் கிடை­யாது.

அவ்­வாறு இலட்­சியம் இருந்­தி­ருந்தால், பிரி­வி­னையை ஆத­ரிக்­க­மாட்டேன் என்று 6ஆவது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் கையெ­ழுத்துப் போட்டு, பாரா­ளு­மன்­றத்தில் அமர்­வ­தற்­காக இந்­த­ள­வுக்கு போட்­டி­யி­ட­மாட்­டார்கள்.

முள்­ளி­வாய்க்­காலில் போராட்டம் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக கூறு­ப­வர்கள் கூட, தனி­நாட்டு கோரிக்கை நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றது என்­பதால் தாம் அதனைக் கைவிட்டு விட்டோம் என்று பகி­ரங்­க­மாகக் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

ஆக, பிர­பா­க­ரனின் இலட்­சியம் நடை­முறைச் சாத்­தி­ய­மற்­றது என்று கூறத் துணிந்­த­வர்கள், அவ­ரது இலட்­சி­யத்தை கைவிட்டு விட்டு, தமது அர­சியல் இலட்­சி­யத்தை அடை­வ­தற்­காக பிர­பா­க­ரனின் வாக்­கி­யத்தை துணைக்கு அழைக்­கின்­றனர்.

அது­போ­லவே, பாரா­ளு­மன்ற ஆச­னத்­துக்­காக எல்­லோரும் ஒரே வடி­வத்தில் தான் மோது­கின்­றனர்.

மோதும் குழுக்கள் தான் வேறு வேறே தவிர, அவர்­களின் கொள்கை இலட்­சியம் எல்லாம் பாரா­ளு­மன்றப் பதவி தான்.

விடு­தலைப் புலிகள், தமது இறுதிக் கால­கட்­டத்தில் தமி­ழரின் அர­சியல் பலத்தை ஒன்­றாகத் திரட்­டவே முனைந்­த­னரே தவிர, சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்க முனை­ய­வில்லை.

பல்­வேறு முகங்­க­ளையும், முரண்­பா­டு­க­ளையும் கொண்­டி­ருந்த தமிழ் அமைப்­பு­களை, பழைய பகை, கருத்து முரண்­பாடு, கொள்கை வேறு­பா­டு­களை மறந்து, கூட்­ட­மைப்­பாக ஒன்­றி­ணைத்­தனர்.

அதற்­கான காரணம், அர­சியல் ரீதி­யாக தமி­ழரின் தேசிய பலம் ஒன்­றி­ணைக்­கப்­பட்டு, வலுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே.

அந்த கொள்­கையில் விடு­தலைப் புலி­களால் கணி­ச­மான வெற்­றியும் பெற முடிந்­தது.

ஆனால், இப்­போது நடக்­கின்ற அர­சியல் யுத்தம், தமி­ழரின் தேசிய பலத்தை சிதைப்­ப­தற்­கா­னது.

தமி­ழர்கள் தமக்­குள்யே பிரிந்து நின்று முட்டி மோதி அழிந்து போவ­தற்­காக நடத்தும் போராட்டம் இது.

இந்த கேடு­கெட்ட அர­சியல் யுத்­தத்­துக்கு விடு­தலைப் புலி­க­ளையும், பிர­பா­க­ர­னையும் துணைக்கு இழுப்­பது அசிங்­கத்­த­ன­மா­னது.

விடு­தலைப் புலி­க­ளையும், பிர­பா­க­ர­னையும், மதிப்­ப­வர்கள், எவ­ரா­வது இருந்தால், முதலில் செய்ய வேண்­டி­யது- அவர்­களை தமது அர­சியல் நலன்­க­ளுக்கு துணைக்கு இழுக்­காமல் இருப்­ப­தே­யாகும்.

அதுவே அவர்­க­ளுக்கு ஆற்றும் மிகப்­பெ­ரிய பிரதி உப­கா­ர­மாக அமையும்.

விடு­தலைப் புலி­களின் போராட்­டத்­துக்கு எல்­லோ­ருமே ஏதோ ஒரு வகையில் பங்­காற்­றி­யி­ருக்­கின்­றனர்.

அதில் வெளிப்­ப­டை­யாகப் பங்­காற்­றி­ய­வர்­களை விட வெளித் தெரியாமல் பங்காறியவர்களே அதிகம்.

இலட்சக்கணக்கான மக்களின் பங்களிப்பில் தான், அந்தப் போராட்டம் உச்சத்தை எட்டியது.

இந்தநிலையில், அந்தப் போராட்டத்துக்கு தாமே உரித்துடையோர் என்றோ, தாமே பெரிய பங்காளர்கள் என்றோ உரிமை கோர முடியாது.

எல்லோருக்கும் இருக்கிறது அந்தப் போராட்டத்தின் மீதான உரிமை.

இதில் ஒருவருக்கு மற்றவர் நிகரில்லை என்று வாதிடமுடியாது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஆற்றிய பங்கை, அறியா மடந்தைகள் தான், விடுதலைப் போராட்டத்தை விற்று அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர்.

அரசியல் என்பது ஒரு போராட்ட வடிவம் தான், ஆனால், அது விடுதலைப் புலிகளின் இலட்சியத்துக்கும் கொள்கைக்கு அப்பாற்பட்ட வழிமுறை.

இந்த அரசியல் சதிராட்டத்துக்கு விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பயன்படுத்திக் கொள்வது போன்ற ஈனச்செயல் வேறேதும் இருக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொள்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்களா?

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com