ilakkiyainfo

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி நீதிமன்றம்

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி நீதிமன்றம்
March 01
12:13 2014
ரோம்: விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமல்ல… அது விடுதலைப் போராட்ட இயக்கமே என்று இத்தாலி நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள் இத்தாலியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர். இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றமற்றவர்கள்
அவர்கள் மீது கடந்த 2010 – ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011 – ம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான ராணுவ கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.01-1393666973-ltte2-600

விடுதலை அமைப்பே
எனவே இந்த இயக்கம் ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது. எனவே, இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க் குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.01-1393667075-italy-govt-60-0-jpg

இத்தாலி மேல் நீதிமன்றம்
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதற்கான வழக்கு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 9 நீதிபதிகள் முன்னிலையில் அந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.01-1393666990-prabakaran-600

பயங்கரவாத அமைப்பல்ல அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும். இதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

01-1393667144-obama35-600

கருத்துக் கணிப்பு
இதற்கிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு, மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்து கணிப்புநடத்த வேண்டும்” என கூறியுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com