ilakkiyainfo

வித்­தி­யாவின் கொலை விவ­காரம்: தடுப்பு காவல் சொல்லும் செய்திகள் என்ன??

வித்­தி­யாவின் கொலை விவ­காரம்:  தடுப்பு காவல் சொல்லும் செய்திகள் என்ன??
June 17
03:11 2015

 

∗ வித்­தி­யாவின் கொலை விவ­காரம் வேண்­டு­மென்றே  யாழ். பிராந்­தி­யத்தில்  அமை­தி­யின்மை குழப்புவதற்காக  வெளிநாட்டு  சக்திகளால் திட்டமிட்டு செய்யப்பட்டதா?

∗ பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இந்த படு­கொலை வழக்கின் விசா­ர­ணைகள் கொண்டு செல்லப்பட்டதன் காரணம் என்ன??

tevu1

சிவ­லோ­க­நாதன் வித்­தியா. இன்று இந்த பெயரை அறி­யா­த­வர்கள் இருக்க முடி­யாது. பாலியல் பலாத்கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்ட நிலையில் வித்தியாவின் சட­ல­மா­னது கடந்த மே மாதம் 14 ஆம் திகதி மீட்­கப்­பட்­டது.

அத­னுடன் தொடர்­பு­டைய ஒன்­பது சந்­தேக நபர்கள் இது­வ­ரையில் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், தற்­போது அவர்கள் பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

உண்­மையில் தற்­போது, இந்த பலாத்­காரம் மற்றும் கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் மற்­றொரு கோணத்­திற்கு திருப்­பப்­பட்­டுள்­ளது.

இத­னையே பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வது உறுதி செய்­கின்­றது.

அப்­படி பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் இந்த படு­கொலை வழக்கின் விசா­ர­ணைகள் இடம்பெறுவதா­னது உண்­மையில் ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும்.

அத­னூ­டாக வித்­தியா பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­ப­டு­வ­தற்­கான உண்மைக் காரணி, அத­னுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அவர்­க­ளது பின்­னணி, கொடூர சம்­ப­வத்தின் பின்னணி என அனைத்­தையும் வெளிப்­ப­டுத்திக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும்.

சாதா­ர­ண­மாக கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் 24 மணி நேரமோ அல்­லது 48 மணி நேரமோ தடுத்து வைத்து இத்­த­கைய பரந்த விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுப்­பது என்­பது கடி­ன­மா­னது.

30 நாள் தடுப்புக் காவலில் வைத்து சந்­தேக நபர்­களை விசா­ரிக்கும் போது பல விவ­கா­ரங்கள் தொடர்பிலும் கொடூ­ரத்தின் பின்­னணி தொடர்­பிலும் வெளிப்­ப­டுத்த முடி­யு­மாக இருக்கும்.

3a7d6adffa806fb25db311fdc360b52aவித்­தியா விவ­கா­ரத்தில் புங்­குடு தீவு பிர­தே­சத்­தையே வதி­வி­ட­மாகக் கொன்ட பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40), பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) ,மகாலிங்கம் சஷேந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசிகுமார் என்ற ஒன்­பது பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் சிலர் தம் மீதான குற்றச் சாட்­டுக்­களை மறுக்­கின்­றனர்.

எனினும் இந்த ஒன்­பது பேர் தொடர்­பிலும் பொலி­ஸாரின் சந்­தேகம் பல­மாக உள்ள நிலையில் இன்னும் சில­ருக்கும் இத­னுடன் தொடர்பு உள்­ள­தாக அவர்கள் சந்­தே­கிக்­கின்­றனர்.

அதனல் தற்­போது சந்­தேக நபர்­களை தடுத்து வைத்து விசா­ரிக்கும் போது அந்த தக­வல்­களை பொலிஸார் வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள எதிர்­பார்க்­கின்­றனர்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழேயே தற்­போது இந்த ஒன்­பது சந்­தேக நபர்­களும் தடுப்பில் எடுக்­கப்­பட்­டுள்­ளனர்.

வாய் மொழி மூலம், சைகைகள், காட்­சிகள் அல்­லது வேறு எந்­த­வொரு முறை­க­ளிலும் வன்­முறைகளை தூண்­டுவோர் தொடர்பில் இந்த சட்டப் பிரிவு பேசு­கின்­றது.

அப்­ப­டி­யானால் வித்­தி­யாவின் கொலை விவ­காரம் வேண்­டு­மென்றே இன நல்­லு­ற­வு­களை சீர்குலைத்து, யாழ். பிராந்­தி­யத்தில்  அமை­தி­யின்மை ஒன்றை ஏற்­ப­டுத்த சந்­தேக நபர்கள் முனைந்தனரா என்­பது  குறித்து பலத்த சந்­தேகம் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு இருக்­கின்­றது.

ஏற்­க­னவே வித்­தி­யாவின் படு­கொ­லைக்கு பின்னர் யாழ்.பிராந்­தி­யத்தில் ஏற்­பட்ட அசா­தாரண நிலைமைகள் கூட இவ்­வா­றான சந்­தே­கங்­க­ளுக்கு கார­ண­மாக இருக்­கலாம்.

vinthan_vidyahome_002-500x264வித்­தி­யாவின் படு­கொ­லைக்கு பின்னர் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலி­ஸாரும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரும் இரு வேறு கோணங்­களில் ஏற்­க­னவே விசா­ர­ணை­களை நடத்­தி­வரும் நிலை­யி­லேயே,

அந் நிலை­மைகள் ஏற்­பட பிர­தான கார­ண­மாக கரு­தப்­படும் வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பி­லான சந்­தேக நபர்கள் பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் விசா­ர­ணை­க­ளுக்­காக எடுக்­கப்­பட்­டுள்­ளமை கொலை விசாரணையின் ஒரு திருப்­ப­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்­டி­ய­தாகும்.

ஆரம்­பத்தில் இந்த படு­கொலை விவ­காரம் தொடர்பில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகா­ரியின் கீழ் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு அதன் பின்னர் அவ்வி­சா­ர­ணைகள் யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய அமைக்­கப்­பட்ட உதவி பொலிஸ்பரிசோதகர் ஒரு­வரின் கீழான விசேட குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் இடம்­பெற்ற விசா­ர­ணை­களில் இருவர் முதல் மூன்று சந்­தேக நபர்­களும் விசேட பொலிஸ் குழுவின் விசா­ர­ணை­களில் 5 சந்­தேக நபர்­களும் கைது செய்­யப்­பட்ட நிலையில் ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ராக கரு­தப்­படும் சுவிஸ் குமார் என அறியப்படும் சசி­குமார் வெள்­ள­வத்­தையில் வைத்து வெள்­ள­வத்தை பொலி­ஸா­ரி­னாலும் கைது செய்யப்­பட்­டி­ருந்­தனர்.

எனினும் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் வெள்­ள­வத்­தையில் கைதாக முன்­ன­ரேயே பொது மக்கள் அவரை பிடித்து பொலி­ஸா­ரிடம் கொடுத்­தி­ருந்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில், பொலி­ஸா­ருக்கு எதி­ரான விசேட விசா­ர­ணை­யொன்று பொலிஸ் விசேட விசா­ரணைப் பிரி­வி­னரால் முன்னெடுக்கப்பட்டே வரு­கின்­றது.

அத­னை­விட நீதி­வானின் உத்­த­ர­வுக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு­வொன்றும் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் தொடர்பில் விசேட விசா­ர­ணை­யொன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளது.

இத்­த­கைய கைது­களின் பின்­ன­ரேயே வித்­தியா படு­கொலை விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனிதப் படு­கொலை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது.

அந்த பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த டீ சில்வா தலை­மை­யி­லான விசேட பொலிஸ் குழு இது தொடர்பில் நடவ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளது.

இந் நிலை­யி­லேயே இந்த படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத செய­லாக கருதப்பட்டு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்ட விதம் மிகவும் கொடூ­ர­மா­னவை.

ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற வித்­தி­யாவின் மரண விசா­ர­ணை­களின் போது இது தொடர்பில் முதன் முதலில் விசா­ர­ணை­களை நடத்­திய ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்தின் குற்ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் காமினி ஜய­வர்­தன அளித்த சாட்­சியம் இதற்கு சிறந்த உதா­ர­ண­மாகும்.

எமக்கு காலை 8.15 மணி­ய­ளவில் பொலிஸ் நிலை­யத்­துக்கு தொலை­பேசி ஊ­டா­கவே தகவல் கிடைத்தது.

அப்­போது பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் கிவ்.பி.பெரேரா, 17 வயது மாணவி ஒருவர் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக என்­னிடம் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பெரே­ராவின் தலைமையில் நானும் குழு­வி­னரும் அங்கு சென்றோம்.

பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அந்த இடம் இருந்­தது. புங்­குடு தீவு ஆலடி சந்­தியில் இருந்து இடது புறத்தே அந்த இடம் உள்­ளது.

பாதையில் இருந்து 500 மீற்றர் தூரத்­துக்­குள்­ளேயே அனைத்தும் இடம்­பெற்­றி­ருந்­தன. பாதையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் சடலம் கிடந்­தது.

நாம் அந்த இடத்­துக்கு சென்ற போது மழை பெய்து ஓய்ந்­தி­ருந்­தது. அத்­துடன் ஜே /28 கிராம சேவ­கரும் அங்­கி­ருந்தார். அங்கு பலர் கூடி­யி­ருந்­தனர்.

சடலம் சிவ­லோ­க­நாதன் வித்­தியா என அவரின் சகோ­தரர் எம்­மிடம் அடை­யாளம் காட்­டினார். அதனைத் தொடர்ந்து அப்­பி­ர­தே­சத்தை குற்றப் பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்து பூர்­வாங்க விசாரணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

சடலம் இருந்த இடத்­துக்கு அருகே ஒற்­றை­ய­டிப்­பாதை ஒன்று இருந்­தது. அந்த பாதை சேறாகியிருந்தது.

அந்த பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற சப்­பாத்து ஒன்று இருந்­தது. சட­லத்­துக்கு அருகே மாணவி­யி­னது துவிச் சக்­கர வண்­டி­யி­ருந்­தது.

அந்த துவிச் சக்­கர வண்­டியின் பின் பக்­க­மாக மாண­வியின் புத்­தகப் பையும் கிடந்­தது. அதன் அருகே இளம் சிவப்பு நிறத்­தி­னா­லான மாண­வியின் குடையும் காணப்­பட்­டது. சட­ல­மா­னது முகம் வானத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும் படி­யாக இருந்­தது.

கைகள் இரண்டும் தலைக்கு மேலே உயர்த்­தப்­பட்டு கட்­டப்­பட்­டி­ருந்­தன. தலை முடி கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ரிப்பன் பட்­டி­யி­னா­லேயே அது கட்­டப்­பட்­டி­ருந்­தது.

மாண­வியின் ஆடைகள் அகற்­றப்­பட்­டி­ருந்­தன. உள்­ளா­டை­களும் கழற்­றப்­பட்­டி­ருந்­தன.

மாண­வியின் இடது காதி­லி­ருந்து இரத்தம் வழிந்­தி­ருந்­தது. அவரின் கழுத்துப் பட்டி கழுத்தை இறுக்­கிய வண்ணம் இருந்­தது. அலரி மரத்தில் கால்கள் இழுத்து கட்­டப்­பட்­டி­ருந்­தன. வாய்க்குள் ஏதோ திணிக்­கப்­பட்­டி­ருந்­தது.

நிர்­வா­ண­மான சட­லத்தின் மேல் பகுதி கழற்­றப்­பட்ட சீரு­டையால் மறைக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த சீரு­டையில் இரத்தக் கறைகள் இருந்­தன.

வயிறும் கீழ் இர­க­சிய பகுதியும் அம்­மா­ணவி அணிந்­தி­ருந்த கழற்­றப்­பட்ட கீழா­டை­யினால் ( உட் பாவாடை ) மறைக்­கப்­பட்­டி­ருந்­தன. கால்கள் சுமார் 180 பாகை கோணத்தில் விரிக்­கப்­பட்டு கட்­டப்­பட்­டி­ருந்­தன.

இடது கால் மாண­வியின் சீரு­டையின் வெள்ளை நிற இடுப்புப் பட்­டி­யினால் கட்­டப்­பட்­டி­ருந்­தது. மற்றைய கால் அவரின் கறுப்பு நிறத்­தி­னா­லான மார்புக் கச்­சையின் பட்­டி­களால் கட்­டப்­பட்­டி­ருந்­தன.

vithiya-680x3651இந்த நிலையில் நான் சட­லத்தை கறுப்பு நிற பொலித்­தீ­னினால் மூடினேன்.

பின்னர் யாழ். தட­ய­வியல் பிரி­வி­ன­ருக்கு தகவல் வழங்­கினோம். அத்­துடன் வித்­தி­யாவின் தாய், அண்ணண் உள்­ளிட்­ட­வர்களிடம் வாக்கு மூலங்­க­ளையும் பதிவு செய்­து­கொண்டோம் என அந்த பொலிஸ் பரி­சோ­தகர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

அந்த சாட்­சி­யங்­களின் படி வித்­தியா மிகக் கொடூ­ர­மான முறை­யி­லேயே பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது.

மர­ண­சாட்­சி­யத்தின் போது வித்தியாவின் அண்ணன் நிசாந்தன் தனது தங்கை சடலமாக கிடந்த முறைமையை விபரிக்கச் சொன்னபோது நெஞ்சுவலியால் துடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, சாட்சியம் அளிக்கும் போது தாய் சரஸ்வதியும் மயங்கி விழுந்தமையும் வித்தியாவின் கொடூர கொலையில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தற்போது வித்தியாவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை வெறுமனே தனியான கொலையாகவோ அல்லது பலாத்கார விடயமாக மட்டுமோ நோக்க முடியாது.

இதன் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடுகள் இருக்கலாம். மேலும் சந்தேக நபர்களும் இருக்கலாம். இந்த தகவல்களே சந்தேக நபர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் 30 நாள் தடுப்புக் காவல் தீர்மானமும் உத்தரவும் எமக்கு சொல்லும் செய்தியாகும்.

எது எப்படி இருப்பினும் யாரும் இல்லாத போது கல்வி கற்கச் சென்ற மாணவியை அடர்ந்த காட்டுக்குள் கொடூரமாக வன்புணர்ந்து படுகொலை செய்த கொடூரர்களை சட்டத்தின் எந்தவொரு பிரிவூடாகவேனும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எம்.எப்.எம்.பஸீர்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com