சீனாவில் ஒரு இளம்பெண் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர் எழுந்திருக்கக்கூட முடியாத நிலையில் ஆம்புலன்ஸுக்கு தனது மொபைல் போன்மூலம் தகவல் கொடுத்தார்.
நடுரோட்டில் காயத்துடன் விழுந்து கிடந்த அந்த இளம்பெண், ஆம்புலன்ஸ் வரும்வரை ஆங்கில டிக்சனரியை எடுத்து ஆங்கில வார்த்தைகளை படித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஒரு சாலையில் Wang Dafan என்ற 18 வயது இளம்பெண் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானார். காயம் சிறிதாக இருந்தாலும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை.
உடனடியாக மொபைல் போன் மூலம் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வரும் வரை நேரத்தை வீணாக்க விரும்பால் தான் கொண்டி வந்திருந்த டிக்சனரியை எடுத்து சுமார் 107 புதிய ஆங்கில வார்த்தைகளை படித்துக்கொண்டிருந்தார்.
போலீஸாரும், ஆம்புலன்ஸும் வந்து அவரிடம் கேட்டபோது, ‘வாழ்க்கை மிகவும் சிறியது. அந்த வாழ்க்கையில் நேரத்தை வீணாக்காமல் கல்வி பயில வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றார்.
மேலும் வலி தெரியாமல் இருக்க மனதை வேறு பக்கம் திருப்ப தனக்கு கல்வி உதவியதாகவும் கூறினார். அவருடைய கல்வி ஆர்வத்தை பார்த்து போலீஸார் வியப்படைந்தனர்.