ilakkiyainfo

விருப்பமில்லாத திருமணத்தால் விபரீதம்: கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்துக்கொன்ற மனைவி

விருப்பமில்லாத திருமணத்தால் விபரீதம்: கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்துக்கொன்ற மனைவி
January 26
21:54 2016

குடும்ப கௌரவத்துக்காக பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சந்தோஷம் இல்லாமல் செய்து விடுகின்றனர்.

எவ்வளவுதான் உலகம் முன்னேறினாலும் காதல் என்ற விடயத்தில் பல பெற்றோர்கள் பிடிவாதக்காரர்களாகவே இருக்கின்றனர். காதல் என்ற புனிதமான உணர்வை பல பெற்றோர்கள் இன்று வியாபாரமாக மாற்றி விட்டனர்.

காதலிக்கும் தங்களது பிள்ளைகளை காதலனிடத்திலிருந்தோ காதலியிடத்திலிருந்தோ பிரித்து வலுக்கட்டாயமாக தங்கள் குடும்பத்துக்கு பொருத்தமான மணமகளை அல்லது மணமகனை தேடிப் பிடித்து திருமணம் செய்து வைக்கின்றனர்.

இதனால் காதலித்த குறித்த பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ மட்டும் சந்தோஷம் கெடுவதில்லை. இருவர் சம்பந்தபட்ட முழுக்குடும்பமுமே பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

காதலை பிரித்து வைப்பதால் குறித்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ திருமணம் முடிந்தவுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு , இதனால் தனது மனைவியை அல்லது கணவனை பழிவாங்கும் எண்ணமும் ஏற்படுகிறது. இதனால் பல பாரதூரமான சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் இரு குடும்பத்தின் நிம்மதியுமே கெடுகின்றது. எனவே, எப்போதும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் காதலை எதிர்த்து இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்கும் முன் சிறிது சிந்திக்க வேண்டும்.

அந்த வகையில் மகளின் காதலை எதிர்த்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்ததால் கொடூரமான நிகழ்வொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கும், சிலாமேகவளநாடு பகுதியை சேர்ந்த ரேகா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்னர் ரேகாவிற்கும், குட்டி என்ற நபருக்கும் காதல் இருந்துள்ளது, இந்நிலையில் ரேகாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த நாள் முதலே, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன, இதற்கிடையில், ரேகா கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேகா வீட்டுக்குச் சென்ற மகேஷ்வரனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது, சம்பவம் நடைபெற்ற அன்று, பாலில் தூக்க மாத்திரையை கலந்து ரேகா கொடுத்துள்ளார். இது தெரியாமல் குடித்துவிட்டு மகேஸ்வரன் உறங்கியுள்ளார்.

பின்னர் ரேகா, மகேஸ்வரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு வெளியே சென்று கதவை பூட்டியுள்ளார்.

உடல் முழுவதும் தீ வேகமாக பற்றி எரிந்ததில் மகேஸ்வரன் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்றுள்ளனர்.

அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மகேஸ்வரனை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதனிடையே, மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, விசாரணை நடத்திய பொலிஸார் ரேகாவை கைது செய்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com