ilakkiyainfo

வீடியோ, புகைப்படம் எடுக்கவில்லையென திருமணத்தை நிறுத்திய தந்தை

வீடியோ, புகைப்படம் எடுக்கவில்லையென திருமணத்தை நிறுத்திய தந்தை
June 28
06:23 2016

திரு­ம­ணத்தில் வீடியோ மற்றும் புகைப்­படம் எடுக்­க­வில்லை எனக் கூறி மணப்­பெண்ணின் தந்­தையே திரு­ம­ணத்தை நிறுத்­தியுள்ள சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அரு­கே­யுள்ள ஆர்.கோம்பை கிரா­மத்தைச் சேர்ந்­தவர் தங்­கராஜ். இவ­ரது மகள் ரேவதி (31). பெரம்­பலூர் மாவட்டம், ஈச்­சம்­பட்­டியைச் சேர்ந்­தவர் செந்தில் (33). இவர்கள் இரு­வ­ருக்கும் திரு­மணம் நிச்­ச­யிக்­கப்­பட்டு நேற்­று­முன்தினம் திரு­மணம் நடக்­க­வி­ருந்­தது.

இந்­நி­லையில், நேற்றுக் காலை மண்­ட­பத்­துக்கு சென்ற மணப்­பெண்ணின் தந்தை தங்­கராஜ், புகைப்­படம், வீடியோ எடுக்க ஆட்கள் வைக்­க­வில்லை.

திரு­மண மண்­டபம் சிறி­ய­தா­க­வுள்­ளது என்றும் இப்­ப­டிப்­பட்­ட­வரை நம்பி எப்­படி பெண்ணைக் கொடுப்­பது’ என்றும் திரு­ம­ணத்தை நிறுத்த வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார்.

அதிர்ச்­சி­ய­டைந்த உற­வி­னர்கள், அவரை சமா­தா­னப்­ப­டுத்­தினர். சமா­தா­ன­ம­டை­யாத தங்­கராஜ், தன் மகள் ரேவ­தியை இழுத்துக் கொண்டு வெளி­யேற முயன்­ற­போது நடந்த களே­ப­ரத்தில் மணப்பெண் ரேவதி மயக்­க­ம­டைந்­துள்ளார். அவரை துறையூர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

தங்­க­ராஜை, உற­வி­னர்கள் தொடர்ந்து சமா­தானம் செய்ய முயன்­றனர். அவரோ விடாப்­பி­டி­யாக திரு­ம­ணத்தை நிறுத்­து­வதில் குறி­யாக இருந்­துள்ளார்.

திரு­ம­ணத்தை நிறுத்­தி­யது குறித்து மாப்­பிள்ளை செந்தில், ‘திரு­ம­ணத்தை வேண்டும் என்றே நிறுத்­தி­விட்­டனர். பெண் வீட்­டா­ரிடம் பேசி திரு­ம­ணத்தை நடத்தி வைக்க வேண்டும்’ என்று துறையூர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தி­ருந்த ரேவ­தி­யிடம், பொலிஸார் விசா­ரித்­துள்­ளனர்.

அவரும் தனக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், செந்தில் வீட்டார் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com