இதனை, அவ்வழியாக சென்ற தனியார் நபரொருவர் அவதானித்து, பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவ்விடத்தில் சோதனை நடத்திய போது களைக் கொல்லிக்கு பயன்படுத்தப்படும் இரு மருந்து போத்தல்கள் கிடந்தன.

மேலும் சடலங்களுக்கு அருகே கிடந்த பையை சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

தொலைபேசியில் இருந்த விவரங்கள் அழிக்கப்பட்டு இருந்ததுடன், சிம் அட்டைகளும் அகற்றப்பட்டு இருந்தன.

இந்நிலையில், உயிரிழந்து கிடந்த நபரின் சட்டைப் பையில் இருந்து சாரதி அனுமதி பத்திரம் மற்றும் உயிரிழந்து கிடந்த சிறுமியின் புகைப்படம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

மேலும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில், உயிரிழந்தவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் (41) எனவும் அந்தச் சிறுமி அவரது மகள் ஜூலியா (8) எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொலிசார் விசாரணை தீவிரப்படுத்தியதில் கிங்ஸ்டன் கிருபாகரனை அவரது மனைவி விவாகரத்து செய்தமையே இவர்களின் தற்கொலைக்கு காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.