ilakkiyainfo

வெற்­றியை தீர்­மா­னிக்கப் போவது யார் ?- என். கண்ணன் (கட்டுரை)

வெற்­றியை தீர்­மா­னிக்கப் போவது யார் ?- என். கண்ணன் (கட்டுரை)
August 09
20:10 2019

மஹிந்த அணியில் உள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவும் சரி, விமல் வீர­வன்ச போன்­ற­வர்­களும் சரி, தனி சிங்­கள மக்­களின்  ஆத­ர­வுடன் வென்று காட்­டுவோம் என்று  கங்­கணம் கட்டக்கூடிய வகையில் தான் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர் .

இலங்­கையில் எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்­தப்­படும் வாய்ப்­புகள் உள்ள நிலையில், இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைத் தீர்­மா­னிக்கும் தரப்பு எது- எந்தெந்த மாவட்­டங்கள் வெற்றி தோல்­வியைத் தீர்­மா­னிக்கும் வல்­லமை பெற்­ற­தாக இருந்து வந்துள்ளன என்ற விஞ்­ஞா­ன­பூர்­வ­மான ஒரு ஆய்வு தேவைப்­ப­டு­கி­றது.

கடந்­த­வாரம், கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரை­யாற்­றி­யி­ருந்த விமல் வீர­வன்ச, வெளி­யிட்­டி­ருந்த கருத்து ஒன்றே இவ்­வா­றான ஒரு விஞ்­ஞா­ன­பூர்­வ­மான தேடலின் அவ­சி­யத்தை உணர்த்­தி­யது.

கொழும்பு, கம்­பஹா, கண்டி, குரு­நா­கல் ஆகிய மாவட்­டங்­களில் வெற்றி பெறு­கின்ற வேட்­பாளர் எவரோ-அவரே, ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டுவார்.

இதுதான் கடந்த வர­லாறு என்று குறிப்­பிட்­டி­ருந்தார் விமல் வீர­வன்ச.

Wimal-Weerawansa-626x380

விமல் வீர­வன்ச.

இந்த மாவட்­டங்­களில் குறிப்­பாக வெற்­றி­பெற வேண்டும் என்ற இலக்­கு­ட­னேயே தமது தரப்பு செயற்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

கிழக்கில் மஹிந்த ராஜபக் ஷவுக்கு 5 வீத முஸ்­லிம்­களின் வாக்­குகள் குறைந்­ததால், அவர் கடந்­த­முறை தோல்­வி­ய­டை­ய­வில்லை என்றும், கம்­பஹா, குரு­நா­கல் மாவட்­டங்­களில் குறைந்­த­ளவு வாக்­குகள் கிடைத்­தமையே தோல்­விக்குக் காரணம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கிட்­டத்­தட்ட இதே கருத்தை முன்னர் கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூறி­யி­ருந்தார்.

வெற்றி- தோல்வியை சிறு­பான்­மை­யினர் தீர்­மா­னிக்கக் கூடி­ய­வர்­க­ளாக இல்லை என்றும், கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­களில் உள்ள நடுத்­தர வர்க்க சிங்­க­ள­வர்­களே தீர்­மா­னிக்கும் சக்தியாக இருந்­துள்­ளனர் என்­பது அவ­ரது வாத­மாக இருந்­தது.

indexகடந்­த­முறை, மஹிந்த ராஜபக் ஷவுக்கு நகர்­புற நடுத்­தர வர்க்க சிங்­கள மக்­களின் வாக்­குகள் கிடைக்­கா­ததால் தான், தோல்­வி­ய­டைய நேரிட்­டது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் உள்ள- மஹிந்த ஆத­ரவு உறுப்பினர்கள் கூட, சிறு­பான்­மை­யின மக்­களின் ஆத­ரவு இல்­லாமல், வெற்­றி­பெற முடி­யாது என்­பதில் உறு­தி­யாக உள்­ளனர்.

எஸ்.பி.திச­நா­யக்க, டிலான் பெரேரா போன்­ற­வர்கள் அதனை சில நாட்­க­ளுக்கு முன்­னரும் கூட உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

ஆனால், மஹிந்த அணியில் உள்ள கோத்­தா­பய ராஜபக் ஷவும் சரி, விமல் வீர­வன்ச போன்­ற­வர்­களும் சரி, தனிச் சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வென்று காட்­டுவோம் என்று கங்­கணம் கட்டக் கூடிய வகையில் தான் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

அதற்­காக மஹிந்த ராஜபக் ஷ, தனது பொது­ஜன முன்னணி கூட்­ட­ணியில் சிறு­பான்­மை­யினக் கட்­சி­களை சேர்த்துக் கொள்­ள­வில்லை என்று கூற முடி­யாது.

அண்­மையில் அவர் கூட்­ட­ணியில் சேர்த்துக் கொண்ட 10 சிறிய கட்­சி­களில், கரு­ணாவின் தலைமை­யி­லான கட்சி, ஈரோஸ், முஸ்லிம் உலமா கட்சி ஆகி­ய­னவும் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன.

பிள்­ளையான் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் விடு­தலைப் புலிகள் கட்சி, ஈ.பி.டி.பி, சிறி­ரெலோ போன்­ற­வற்றை மாத்­தி­ர­மன்றி, இன்னும் பல சிறிய தமிழ்க் கட்­சி­க­ளையும் வளைத்துப் போடும் முயற்­சி­களில் மஹிந்த தரப்பு ஈடு­பட்டு வரு­வதை மறுப்­ப­தற்­கில்லை.

சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களைப் பிரித்து எடுப்­பதன் மூலமே, வெற்­றி­யீட்­டலாம் என்­பதில் மஹிந்த ராஜபக் ஷ உறு­தி­யாக இருந்­தாலும் அவ­ரது தரப்பின் வியூகம் வேறு மாதி­ரி­யா­ன­தா­கவே தெரி­கி­றது,

பெரும்­பான்­மையை சிங்­கள மக்­களின் வாக்­கு­களின் மூலம் உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதே அது. அதற்­காகத் தான், கொழும்பு, கம்­பஹா, குரு­நா­கல், கண்டி ஆகிய மாவட்­டங்­களின் மீது குறிவைத்தி­ருக்­கி­றது பொது­ஜன முன்­னணி.

ஏன் இந்த நான்கு மாவட்­டங்­களின் மீதும் பொது­ஜன முன்னணி குறி­வைத்­தி­ருக்­கி­றது என்­ப­தற்கு விமல் வீர­வன்ச கொடுத்­துள்ள விளக்கம் முற்­றிலும் சரி­யா­னது அல்ல.

கொழும்பு மாவட்­டத்தைப் பொறுத்­த­வ­ரையில், இது­வரை நடந்த 7 ஜனா­தி­பதித் தேர்­தல்­களில், 6 தேர்­தல்­களில், ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான வேட்­பா­ளரே வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார்.

2005 இல் மாத்­திரம் தோல்­வி­யுற்ற வேட்­பா­ள­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு அங்கு அதிக வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன.

கம்­பஹா மாவட்­டத்­திலும், அதே­போன்று தான், 6 தேர்­தல்­க­ளிலும், ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கே வெற்றி கிடைத்­தது.

1988ஆம் ஆண்டு தேர்­தலில், பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யாகத் தேர்வு செய்­யப்­பட்ட போதும், கம்­ப­ஹாவில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வுக்குத் தான் அதி­க­ளவு வாக்­குகள் கிடைத்­தன.

கண்டி மாவட்­டத்தில், 6 தேர்­தல்­களில், ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான வேட்­பா­ளரே வெற்­றியைப் பெற்­றுள்ளார்.

2005 இல் மாத்­திரம் தோல்­வி­யுற்ற வேட்­பா­ள­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கே அதிக வாக்­குகள் கிடைத்­தி­ருந்­தன.

குரு­நா­கல் மாவட்­டத்தைப் பொறுத்­த­வ­ரையில், 2015 இல் நடந்த ஜனா­தி­பதித் தேர்தல் தவிர, ஏனைய 6 தேர்­தல்­க­ளிலும், ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­னவர் தான் வெற்­றியைப் பெற்று வந்­தி­ருக்­கிறார். 2015 இல் மஹிந்த ராஜபக் ஷவுக்கே அதிக வாக்­குகள் கிடைத்­தன.

இந்த நான்கு மாவட்­டங்கள் மாத்­தி­ரமே, இவ்­வா­றான ஒரு பண்பை கடந்த 7 தேர்­தல்­க­ளிலும், வெளிப்­ப­டுத்­தி­யதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும்.

எல்லா ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும், ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான வெற்றி வேட்­பா­ள­ருக்கு மாத்­தி­ரமே சாத­க­மாக இருந்த ஒரே ஒரு மாவட்டம் பொலன்ன­றுவ தான். ஆனால் அதனை விமல் வீர­வன்ச குறிப்­பி­ட­வில்லை.

அத்­துடன், விமல் வீர­வன்ச குறிப்­பிட்ட, 4 மாவட்­டங்கள் தவிர, அம்­பாந்­தோட்டை, கேகாலை, புத்­தளம், இரத்­தி­ன­புரி, மொன­ரா­கல ஆகிய ஏனைய ஐந்து மாவட்­டங்­களும் கூட, 6 ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும், ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வான வேட்­பா­ள­ரையே ஆத­ரித்­தி­ருந்­தன.

எனவே, கொழும்பு, கம்­பஹா, கண்டி, குரு­நா­கல ஆகிய மாவட்­டங்­களின் வெற்­றியை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெற்று விடலாம் என்று தப்­புக்­க­ணக்குப் போட முற்­ப­டு­கி­றது பொது­ஜன முன்னணி.

பொது­ஜன முன்னணி வேறொரு கணக்கைப் போடு­கி­றது. அது தனியே கடந்த கால வெற்­றியை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்­டது அல்ல.

இந்த நான்கு மாவட்­டங்­களும் தான் அதி­க­பட்ச வாக்­கா­ளர்­களைக் கொண்­டவை. இந்த நான்­குமே 10 இலட்­சத்­துக்கும் அதி­க­மான வாக்­கா­ளர்­களைக் கொண்ட மாவட்­டங்­க­ளாகும்.

கொழும்பு மாவட்­டத்தில் 76 வீதமும், கண்டி 74 வீதமும், குரு­நா­க­லில் 91.9 வீதமும், கம்­ப­ஹாவில் 90.6 வீதமும் சிங்­க­ள­வர்கள் வசிக்­கின்­றனர். இந்த நான்கு மாவட்­டங்­க­ளிலும் சரா­ச­ரி­யாக, 83 சத­வீ­த­மான சிங்­கள வாக்­கா­ளர்கள் இருக்­கின்­றனர்.

அவர்­களில் பெரும்­பான்­மை­யா­னோரை தமது பக்கம் இழுத்துக் கொண்டால், ஏனைய சிங்­களப் பகு­தி­களில் கிடைக்கும் வாக்­கு­களைக் கொண்டு பெரும்­பான்மை பலத்தைப் பெற்று விடலாம் என்­பது இவர்­களின் கணக்கு.

அம்­பாந்­தோட்டை, கேகாலை, புத்­தளம், இரத்­தி­ன­புரி, மொன­ரா­கல போன்ற மாவட்­டங்­க­ளிலும், அதை­ய­டுத்து, கடந்த தேர்­தல்­களில் வெற்றி பெற்ற வேட்­பா­ள­ருக்கு அதி­க­ளவில் ஆத­ரவு அளித்த அனு­ரா­த­புரம், பதுளை, அம்­பாறை, காலி, களுத்­துறை, மாத்­தறை, மாத்­தளை போன்ற மாவட்­டங்­க­ளிலும் பெரும்­பாலும் சிங்­கள வாக்­கா­ளர்­களே அதிகம்.

தமி­ழர்கள், முஸ்­லிம்கள் அதி­க­ளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு, மலை­யக மாவட்­டங்­களில், ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட வேட்­பா­ளர்கள் வெற்றி பெற்­றது மிகக்­கு­றைவு.

குறைந்­த­பட்­ச­மாக 3 தேர்­தல்­களில், அதா­வது, 1994, 1999, 2015 ஆண்­டு­களில் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­திகள் தான் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் வெற்­றியைப் பெற்­றி­ருக்­கி­றார்கள்.

ஏனைய சந்­தர்ப்­பங்­களில் வெற்றி வேட்­பா­ள­ருக்கு சாத­க­மாக யாழ்ப்­பாண வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்­தி­ருக்­க­வில்லை.

நிலை­மைகள் இவ்­வா­றாக இருந்­தாலும், கொழும்பு, கண்டி, கம்­பஹா, குரு­நா­கல் ஆகிய மாவட்­டங்­களில் அதி­க­ளவு வாக்­கா­ளர்­களும், அதி­க­ளவு சிங்­கள வாக்­கா­ளர்­களும் இருந்­தாலும், யாழ்ப்­பாணம், உள்­ளிட்ட வடக்கு கிழக்கு மாவட்­டங்­களும், நுவ­ரெ­லிய மாவட்­டமும், ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைத் தீர்­மா­னிப்­பதில் முக்­கிய பங்கை வகித்து வந்­தி­ருக்­கின்­றன.

2005 ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் வெற்­றியை சிங்­கள மக்கள் தீர்­மா­னிக்­க­வில்லை.

சிங்­க­ள­வர்­களின் ஆத­ரவை அவர் அதிகம் பெற்­றி­ருந்­தாலும், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், மஹிந்த ராஜபக் ஷவும் சம அள­வி­லான மாவட்­டங்­க­ளி­லேயே வெற்றி பெற்­றி­ருந்­தனர்.

அவ்­வாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெற்றி பெற்ற மாவட்­டங்­களில் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்­டங்­களும் கூட அடங்­கி­யி­ருந்­தன. ஆனாலும் அவரால் வெற்­றியைப் பெற­மு­டி­ய­வில்லை.

காரணம், தமிழ்ப் பகு­தி­களில் பல இடங்­களில் முற்­றா­கவும் சில இடங்­களில் கணி­ச­மா­கவும் – வாக்­க­ளிக்க மக்கள் முன்­வ­ர­வில்லை.

7 இலட்சம் வாக்­கா­ளர்­களைக் கொண்­டி­ருந்த யாழ்ப்­பா­ணத்தில் சுமார் 8500 பேரே வாக்­க­ளித்­தனர். இரண்­டரை இலட்சம் வாக்­கா­ளர்­களைக் கொண்ட வன்­னியில் 85 ஆயிரம் பேர் தான் வாக்­க­ளித்­தனர். மட்­டக்­க­ளப்பில் 48 வீத­மான வாக்­குகள் தான் பதி­வா­கின.

இந்த மூன்று மாவட்­டங்­க­ளிலும், விடு­தலைப் புலி­களின் செல்­வாக்­கினால் வாக்­க­ளிக்க தமிழ் மக்கள் செல்­ல­ வில்லை. அதுவே மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாத­க­மாக மாறி­யது.

அந்த தேர்­தலில் மஹிந்த ராஜ பக் ஷ 181,000 வாக்­கு­களால் தான் வெற்­றியைப் பெற்­றி­ருந்தார். யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு. வன்­னியில் வாக்­க­ளிப்பு சுமு­க­மாக இடம்­பெற்­றி­ருந்­தாலே, முடிவு தலை­கீ­ழாக மாறி­யி­ருக்கும்.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில், சுமார் 58 வீத­மான சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெற்­றி­ருந்தும் மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்­றியைப் பெற முடி­ய­வில்லை. ஏனென்றால், 84 வீத­மான சிறு­பான்­மை­யினர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருந்­தனர்.

இந்த தேர்­தலில், 12 மாவட்­டங்­களில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றியைப் பெற்­றி­ருந்­தாலும், அவற்றில் மஹிந்த ராஜபக் ஷ உண்­மையில் படு­தோல்­வியைச் சந்­தித்­தது, வடக்கு, கிழக்கு, மலை­யக மாவட்­டங்­களில் தான்.

கம்­ப­ஹாவில் 5000 வாக்­கு­க­ளாலும், பது­ளையில் 300 வாக்­கு­க­ளாலும், புத்­த­ளத்தில் 4000 வாக்­கு­க­ளாலும், தான் மஹிந்த ராஜபக் ஷ தோல்வி கண்­டி­ருந்தார்.

இதனை பெரிய தோல்­வி­யா­கவோ, அவ­ரது பிர­தான வெற்­றிக்கு ஆபத்­தாக அமைந்த தோல்­வி­யா­கவோ கருத முடி­யாது,

கொழும்பில் சுமார் 163,000, கண்­டியில் 89,000, பொலன்­ன­று­வையில் 42,000 வாக்­குகள் தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அதி­க­மாக கிடைத்­தி­ருந்­தன.

இந்த வாக்­கு­களை, மஹிந்த ராஜ பக் ஷ தான் கைப்­பற்­றிய, ஏனைய 10 மாவட்­டங்­க­ளிலும் உள்ள சிங்­கள வாக்­கு­களைக் கொண்டு இல­கு­வாக சமப்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும்.

ஆனால், அது தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருக்­க­வில்லை. மட்­டக்­க­ளப்பில் 168,000, அம்­பா­றையில் 111,000, யாழ்ப்­பா­ணத்தில் 149,000, வன்­னியில் 107,000, நுவ­ரெ­லி­யாவில் 127,000, திரு­கோ­ண­ம­லையில் 88,000, என கிடைத்த சிறு­பான்­மை­யின மக்­களின் மேல­திக வாக்­குகள் தான் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றியைத் தீர்­மா­னித்­தி­ருந்­தன.

ஆக, இந்த இரண்டு தேர்­தல்­க­ளையும் பார்க்கும் போதே, அதி­க­ளவு சிங்­கள வாக்­கா­ளர்­களைக் கொண்ட மாவட்­டங்­களோ, அதி­க­ளவு வாக்­கா­ளர்­களைக் கொண்ட மாவட்­டங்­களோ தான் – வெற்­றியைத் தீர்­மா­னிக்கும் வல்­ல­மையை கொண்­டி­ருக்­க­வில்லை என்பது புலனாகும்.

– என். கண்ணன்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com