மடக்களப்பில் அமைந்துள்ள ஸ்டூடியோவுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை காவியுடைதரித்த பிக்கு ஒருவர் புகுந்து உரத்த சத்தமிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.

 

ஸ்டூடியோவில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்த குழந்தை ஒன்றின் புகைப்படத்தை காட்டி இது யாருடையது? எனது சிறிய வயது புகைப்படம் இதை ஏன் நீங்க காட்சிப்படுத்த வேண்டும், இதற்கு விலை 125 ரூபாவா?

நான் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு போகப்போகிறேன், என கடையில் வேலை செய்யும் ஊழியர்களை அச்சுறுத்தியதுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

pikuaasகாவியுடை தரித்து வந்தவர் உண்மையில் பிக்கு போன்று நடந்து கொள்வில்லை  என, குறித்த ஸ்டூடியோவில் தொழில் புரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வீதியில் நின்றவர்கள் பிக்குவை மறித்து நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள் என வினவியுள்ளனர். நான் மட்டக்களப்பைச் சுற்றிப்பார்க் வந்துள்ளேன் என தெரிவித்து விட்டு பிக்கு சென்றுள்ளர்.’

இந்நிலையில் இவ்விடையம் குறித்து 119 என்ற இலக்க பொலிஸ் அவசர பிரிவுக்கு குறித்த கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு செல்வதற்கு முன்னர் பிக்கு இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு மட்டக்களப்பு ரயில் நிலையப் பகுதி நோக்கிச் சென்றதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் மட்டக்களப்பு பொலிஸார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.