ilakkiyainfo

ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப்

ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப்
March 30
08:32 2020

கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசியுடன் தான் நல்ல நட்பு பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கான பாதுகாப்பு செலவினங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்காவின் பொது பாதுகாப்பு நிதியை தாங்கள் கோர போவதில்லை என ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்திருந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுகிற காரணத்தால், மேகனின் சொந்த ஊரான கலிஃபோர்னியாவிற்கு இந்த தம்பதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். மார்ச் 31ம் தேதி முதல் இவர்கள் பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளனர்.

ஹாரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அமெரிக்க அரசாங்க உதவியை பெற போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியை பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.

ஹாரி மற்றும் மேகன் கனடாவில் வசித்தபோது, கனடா அரசாங்கமும் பாதுகாப்பு செலவினங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. தற்போது அமெரிக்காவும் அதையே பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

201801311115427880_Donald-Trump-on-green-cards-Time-to-move-to-merit-based_SECVPF.gifதற்போது ஹாரி மற்றும் மேகன் தங்கியுள்ள கலிஃபோர்னியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,565 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலிஃபோர்னியாவின் ஆளுநர் மக்கள் அனைவரையும் தங்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இளவரசர் ஹாரியின் தந்தையான வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அண்மையில் பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது. ஆனால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை நிர்வாகம் கூறுகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com