பாலிவுட் நடிகருடன் காதலை முறித்துக்கொண்டார் அக்ஷரா ஹாசன். கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார். அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’ இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
நடிக்க வருவதற்கு முன் இந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா மகன் விவான் ஷாவை அக்ஷரா காதலித்தார். இருவரும் பல இடங்களில் ஜாலியாக சுற்றினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
அதை இருவரும் மறுக்கவில்லை. கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தபிறகு அக்ஷராவுக்கும் நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் வந்தது. அதை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் ‘ஷமிதாப்‘ படத்தில் அக்ஷராவுக்கு வாய்ப்பு தேடி வந்தது. இதில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதையடுத்து விவான் ஷாவுடனான காதலில் தேக்கம் ஏற்பட்டதுடன் அவரை சந்திப்பதை நிறுத்திக்கொண்டார் அக்ஷரா.
இது விவானின் மனதை பாதித்தது. காதல் பற்றி வெளிப்படையாக கூறாமல் இருந்த அவர் தற்போது அது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது, ‘கடந்த 2 வருடமாக அக்ஷராவுடன் பழகி வந்தேன்.
தற்போது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் எங்களுக்குள் உறவு எதுவும் இல்லாமல் பிரிந்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதியை வெளியேற்றிய லட்சுமி மேனன்
சென்னை: விஷால் படத்திலிருந்து ஸ்ருதியை வெளியேற்றிவிட்டு ஹீரோயின் ஆனார் லட்சுமிமேனன்.விஷால்-ஸ்ருதி ஹாசன் இணைந்து ‘பூஜை என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
ஹரி இயக்கும் இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இதிலும் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது.
ஆனால் திடீர் திருப்பமாக அதில் மாற்றம் செய்திருக்கிறார் இயக்குனர். ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமி மேனனை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார்.ஏற்கனவே விஷாலுடன் ‘பாண்டியநாடு‘, ‘நான் சிவப்பு மனிதன் படங்களில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். அத்துடன் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுவும் பரவியது.
இதெல்லாம் இந்த ஜோடிக்கு பிளஸ் ஆக இருக்கும் என்று ஒரு கணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ‘பாண்டியநாடு‘ படத்தை பொறுத்தவரை விஷால், லட்சுமிமேனன், சுசீந்திரன் இணைந்த படம் ஆகும்.
அது ஹிட்டானதால் அந்த ராசி இந்த படத்துக்கும் ஒர்க்அவுட் ஆகும் என்று சுசீந்திரன் எண்ணுவதாக கூறப்படுகிறது. ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமிமேனன் நடிப்பது உண்மையா என்று விஷாலிடம் கேட்டதற்கு, ‘உண்மைதான். படத்தில் ஹீரோயினுக்கு குறைந்தளவே கேரக்டர் உள்ளது.
ஏற்கனவே பாண்டியநாடு ஹிட் ஆகி இருப்பதால் லட்சுமிமேனன் காம்பினேஷன் பொருத்தமாக இருக்கும் என்று யூனிட்டார் கருதுகின்றனர் என்றார்.
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.. அர்னால்ட் ஏன் கோவிச்சிக்கிட்டு பாதியில் போனார் தெரியுமா? (வீடியோ)
Jodi No 1 Season 7 20-09-2014 – Vijay Tv