உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் பகிர்ந்துகொள்வதனைப் போல காதலனையும் பகிர்ந்துகொண்டுள்ளனர் அமெரிக்காவைச் சேர்ந்த இணைபிரியாத இரட்டையர்கள்.
இரட்டையர்களான பெக்கி எமி மற்றும் பெக்கி கிளாஸ் என்பவர்கள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார்கள். 46 வயதான இந்த இரட்டையர்கள் கடந்த 15 வருடங்களில் 30 நிமிடங்களுக்கு இவர்கள் பிரிந்திருந்ததே இல்லையாம்.
இவர்கள் தங்களுக்கிடையில் உணவு, படுக்கையறை, தொழில், மது, பேஸ்புக் கணக்கு, தொலைபேசி என அனைத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரே சிகை அலங்காரத்துடன் தங்களுக்கான ஆடைகளையும் சற்று நிறம் மாற்றமான ஒரே ஆடைகள் மற்றும் உள்ளாடைகளையும் அணிகின்றனர். மொத்தத்தில் கண்ணாடியின் விம்பம் போல வாழ்கின்றனர்.
ஒரே மாதிரி இருக்க ஆசைப்படுவதனால் கடந்த 19 வருடங்களால் உடலின் நிறையைப் பேண ஒரே அளவாகவே உண்பதுடன் பருகவும் செய்கிறார்கள்.
ஆச்சரியமாக இவர்கள் இருவரும் ஒரே காதலனையும் டேட்டிங்கில் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு திருமணம் மீது ஆர்வம் இல்லையாம். இதனால் காதலனை தொடரவில்லை. தாங்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துகொண்டது போல உணர்கிறார்களாம்.
‘முன்னாள் காதலனான கிறிஸ் என்பவரை விருந்துபசாரமொன்றில் சந்தித்தோம். ஒரே நேரத்தில் அவருடன் டேட்டிங் சென்றோம். அவர் எப்போதும் எங்கள் இருவரையும் வெளியில் அழைத்துச்செல்வார்’ என்கிறார் எமி.
‘ஒரே வாழ்க்கைப் பாதையைக் கொண்ட இரு உடல்களைக்கொண்ட ஒருவராக தங்களை உணர்கின்றோம்’ எனக் கூறுகிறார்கள் இந்த இரட்டையர்கள். இதனால் ‘மரணத்திலும் கடவுள் எங்களை ஒன்றிணைப்பார். ஒரே நேரத்தில் மரணிப்போம்’ என நம்பிகைகையுடன் எமியும் பெக்கியும் ஒன்றாகக் கூறுகிறார்கள்.