ஆஸ்கார் பிலிம்ஸ் தரப்பில். அர்னால்ட் கிளம்பியதற்குக் காரணம் அந்த பாடி பில்டர்கள்தான் என்று ஆஸ்கார் ரவியே குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தோடு விடவில்லை… ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு பாடி பில்டரும் அர்னால்டை நெருங்கி, அவர் கையைப் பிடித்து முத்தமிட்டும் காலில் விழுந்தும் தங்கள் அன்பை கொஞ்சம் ஓவராகக் காட்டினார்.ஏற்கெனவே 3 மணி நேரம் வெட்டியாகக் காத்திருந்த அர்னால்ட், இந்த நிகழ்ச்சியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அந்த பாடி பில்டர்களோடு மேடையேறிவிட்டார்.அப்போது கையில் எழுதி வைத்திருந்த குறிப்புகளுடன்தான் போனார். மேடையில் விரிவாகப் பேசி, சென்னை மக்களிடமிருந்து விடை பெற்றுச் செல்ல வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. அதை நேரடியாகவும் பார்க்க முடிந்தது.
எண்ணைய் தடவிய உடம்பில் வேர்வை வழிய வந்த பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப் பிடித்தும், கையில் முத்தமிட்டும் ஆர்வக் கோளாறு பண்ணியதால், அவரது உடை அழுக்காகி, அவர் கைகளிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டது.அதனால்தான் அர்னால்ட் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. தனக்கு மரியாதை செலுத்திய பாடி பில்டர்களை மேடைக்கு கூட்டிப் போய், ஒழுங்காக அவர்களை நிற்கை வைத்து அவர்களின் தோளில் கைபோட்டு போட்டோ எடுத்துக் கொண்டவர் அர்னால்ட்.
அவர் போய் இந்த அற்ப காரணத்துக்காக பாதியில் வெளியேறுவாரா?
ஆனால் அமெரிக்கர்களுக்கு நேரந்தவறாமை என்பது மிக முக்கியம். அர்னால்டை அழைக்கும் முன் இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்திருக்க வேண்டாமா?
முன்பு ஜாக்கி சான் கலந்து கொண்ட தசாவதாரம் விழா, சரியான நேரத்துக்கு ஆரம்பித்து, முடிந்தது. காரணம் அதில் ஜாக்கி சான் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அன்றைய முதல்வர் கருணாநிதியும் பங்கேற்றார். முதல்வரின் நிகழ்ச்சி என்பதால் நேர விரயம் ஆகாமல் சரியான நேரத்துக்கு நடந்து முடிந்தது. அந்த அளவுக்கு நடந்திருந்தால் கூட இந்த அளவு அவமானம் நேர்ந்திருக்காது!பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ டீசர் வெளியானது (Video)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கத்தி’ படத்தின் பாடல்கள் இன்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
விஜய் நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் ‘கத்தி’ படத்தின் இசையை பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஈரோஸ் நிறுவனம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கத்தி’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில், ‘கத்தி’ படத்தின் டீசரும் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. படத்தினை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.