இந்து கடவுள் விநாயகர் ஆட்டுக்குட்டி கறியை பிரபலப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள விளம்பரத்துக்கு கடும் கண்டங்கள் எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் ஊக்குவிக்கும் நிறுவனமான Meat and Livestock Australia (MLA) சர்ச்சைக்குரிய ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், ஒரு பொதுவெளி விருந்து நடக்கும் டேபிளில் விநாயக கடவுள், ஜீசஸ், புத்தர் போன்ற வேடங்கள் அணிந்த நபர்கள் உட்பட பலர் உட்கார்ந்துள்ளனர்.
அவர்கள் ஆட்டுக்குட்டி கறியின் பெருமையை பேசி விளம்பரம் செய்வது போலவும், உட்கார்ந்திருக்கும் சிலர் சாப்பிடுவது போலவும் விளம்பரத்தில் உள்ளது.
மேலும், ஆட்டுக்குட்டி கறி எல்லோரும் சாப்பிடக்கூடிய உணவு என விளம்பரத்தில் அவர்கள் கூறுகிறார்கள்.
விநாயகர் கடவுள் சைவம் என நம்பப்படும் வேளையில் இந்த விளம்பரம் அவுஸ்திரேலியாவில் வாழும் இந்து சமுதாயத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்து சமூகத்தின் செய்தி தொடர்பாளர் Nitin Vashisht கூறுகையில், இந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என கோரியுள்ளேன்.
இது ஒரு கொடுமையான விளம்பரம் என கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் மக்கள் பலர் விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.
MLA நிறுவனத்தின் மேலாளர் Andrew Howie கூறுகையில், உங்கள் நம்பிக்கை, பின்னனி எல்லாவற்றையும் மீறி ஆட்டுக்குட்டி உங்களை ஒன்றினைக்கும் என்பதையே விளம்பரத்தில் கூறியுள்ளோம்.
எங்கள் நவீன அவுஸ்திரேலியாவின் மத நம்பிக்கைகள், பின்னணிகள் மற்றும் உணவுத் தேவைகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்தும் விடயங்களே இதில் காட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.