மற்ற பாடி பில்டர்கள் போல சாஜாத் கஹ்ரிபின் உடற்கட்டு இல்லை. ஓர் மாமிச மலை போல திகழ்கிறார் சாஜாத் கஹ்ரிபி. இவர் எப்போதும் ஷர்ட் அணியாத படங்களை தான் அதிகமாக சமூக தளங்களில் வெளியிடுகிறார்.
இவரது பல புகைப்படங்கள் இன்று வைரலாக சமூக தளங்களில் பரவி வருகின்றன. உடலை கட்டுக்கோப்பாக பேணிக்காத்து வரும் சாஜாத் கஹ்ரிபி வரும் காலத்தில் ஹாலிவுட் சினிமாக்கள் மற்றும் டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) போன்றவற்றில் இடம்பெற்று பெரும் நட்சத்திரமாக மாறுவதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
வரும் காலத்தில் சாஜாத் கஹ்ரிபியை மல்யுத்த போட்டிகளில் காண்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பது போலவும். இவர் அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார் என்றும் இவரது சமூகதள ஃபாலோவர்கள் கருதி வருகின்றனர்….
ஈரானியன் ஹல்க்!
24 வயது நிரம்பிய ஈரானியன் தான் இந்த சாஜாத் கஹ்ரிபி! சமூக ஊடகங்கள் முழுவதும் ரியல் லைப் ஹல்க், ஈரானியன் ஹல்க் என புகழாரம் சூட்டப்பட்டு அதிகளவில் ஷேர் செய்து இவரை உலகபுகழ் அடைய வைத்திக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை “தி பெர்சியன் ஹெர்குலிஸ்” என்றும் கூறுகின்றனர்.
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை “தி பெர்சியன் ஹெர்குலிஸ்” என்றும் கூறுகின்றனர்.
பிரம்மாண்டம்!
பாடி பில்டிங் செய்யும் பலரும், உடற்கட்டை இது போல ஏற்றுவது கடினம் என்றும். மாமிச மலை போல திகழ்ந்தாலும், மேல் உடல், கீழ் உடல் இரண்டையும், இப்படி பிரம்மாண்டமான முறையில் ஏற்றுவது மிகவும் கடினம். ஆனால், 24 வயதில் சாஜாத் கஹ்ரிபி இந்த தோற்றம் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது என்றும் கூறுகின்றனர்.
உடல் எடை! நம்பமுடியாத அளவில் இருக்கிறது இவரது உடல் எடை. ஆம், சாஜாத் கஹ்ரிபியின் உடல் எடை 350 பவுண்டுகள்.
படர்ந்து பரவி கிடக்கும் உடல்!
இவரது மார்பு, தோள், புஜங்கள், கைகள் போன்றவை போட்டோஷாப் செய்தால் கூட பெற முடியாத அளவு இருக்கிறது என நெட்டிசன்கள் வாய்பிளந்து கூறிவருகின்றனர்.
படர்ந்து பரவி கிடக்கும் உடல்!
இவரது மார்பு, தோள், புஜங்கள், கைகள் போன்றவை போட்டோஷாப் செய்தால் கூட பெற முடியாத அளவு இருக்கிறது என நெட்டிசன்கள் வாய்பிளந்து கூறிவருகின்றனர்.
பாடி பில்டிங்! ஈரான் நாட்டிற்காக சாஜாத் கஹ்ரிபி பல பாடி பில்டிங்க போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.