திருமணமே முடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து ஒற்றைக் காலில் நின்ற இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமாகிய அனர்கலி ஆகார்ஷா இரகசிய திருமணம் முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரையே அனார்கலி திருணம் முடித்துள்ளதாக தெரியவருகிறது.
அனார்கலியின் திருமணத்தை நடத்தி வைக்க இலங்கையில் இருந்தும் ஒரு குழு அமெரிக்கா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் உண்மை நிலை குறித்து ஆறிய ´அத தெரண கொசிப்´ பிரிவு அனார்கலி ஆகார்ஷாவை தொலைபேசியில் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தெனிலவு வேலையில் பிசியாக இருக்கிறாரோ தெரியவில்லை.
எனினும் திருமணம் முடித்த அனார்கலி தனது கணவருடன் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.