ரஷ்யாவை சேர்ந்த 87 வயதுடைய நடிகர் ஒருவர், அவரது 27 வயது மனைவி தன்னுடன் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நடிகர் இவான் க்ராஸ்கோ (87). இவர் 3 திருமணங்கள் செய்து, அதன் மூலம் 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் பெற்றெடுத்துள்ளார்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடாலியா க்ராஸ்கோ (27) என்ற பெண்ணை 4 வதாக திருமணம் செய்தார்.
தன்னை விட 60 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், இவான் க்ராஸ்கோ கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
இதற்கிடையே டாலியா க்ராஸ்கோ, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவரை விவகாரத்து செய்ய இவான் க்ராஸ்கோ முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.