அமெரிக்க அதிபர் டிரம்ப், உல்லாசமாக இருக்க, தன்னுடன் ஒருநாள் இருக்கும்படி தன்னை அழைத்ததாக பிரபல ஹாலிவுட் நடிகை புரூக் ஷீல்ட்ஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடும் “கவனியுங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது?” எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பிரபல ஹாலிவுட் நடிகை புரூக் ஷீல்ட்ஸ் கலந்து கொண்டு தனது திரையுலக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.
அவர் கூறுகையில், நிகழ்ச்சி ஒன்றில், என்னுடன் கலந்து கொண்ட டிரம்ப், ஒருநாள் அவருடன் ‘இருக்கும்’ படி என்னை அழைத்தார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய பணக்காரரான நான் அமெரிக்காவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ ஆன உன்னுடன் ஒருபொழுது உல்லாசமாகஇருக்க விரும்புகிறேன் எனக் கூறினார். அப்போதுதான் அவர் தம்முடைய முன்னாள் மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.
ஆனால், நானே எனக்கு காதலர் இருக்கிறார். இதை அறிந்தால் அவர் நிச்சயம் மகிழ்ச்சி அடையமாட்டார் எனக் கூறி அவரின் விருப்பத்தை நிராகரித்து விட்டேன் என நடிகை புரூக் ஷீல்ட்ஸ் தெரிவித்தார்.
n10