2008-ஆம் ஆண்டு ஐPடு துவங்கப்பட்ட போது மகேந்திர சிங் தோனியை சென்னை அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது தெரியுமா?…
11 வருடங்களுக்கு முன்பு, 2008-ஆம் ஆண்டு முதன் முதலாக IPL தொடரில் தல தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது என்ற விவரம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
IPL வீரர்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானவர் ரிச்சர்ட் மேட்லி. இவர் தனது ட்விட்டரில் 2008-ஆம் ஆண்டு வீரர்கள் ஏலம் விட்டபோது எந்த வீரர் எவ்வளவு விலைக்கு விற்கப்பட்டார் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், 40,000 அமெரிக்க டாலர்களை அடிப்படை விலையாகக் கொண்ட மகேந்திர சிங் தோனியை, 1.5 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி) டாலருக்கு சென்னை சூப்பர் கிஸ் அணி வாங்கியுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகின்றது.