மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிற்கவுள்ளதாக தெரிவித்திருந்த கமல், அதற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.
முன்னதாக, கமல்ஹாசன், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுருந்தார்.
ஆனால், இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர்தான் பவர் ஸ்டார் சீனிவாசன் என்கிற தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்திய குடியரசு கட்சியில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக சேர்ந்த பவர் ஸ்டார் சீனிவாசன், அக்கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
அவர் தற்போது அக்கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் பத்திரிகை ஒன்றிற்கு கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் நிற்கவுள்ள இந்த கட்சியின் சார்பில் தென் சென்னையில் போட்டியிடவுள்ள பவர் ஸ்டார், அந்த தொகுதியில் தனக்கு போட்டியாக ரஜினியையே கருதுவதாகவும், ஆனால் அவர் சந்திக்காத இந்த தேர்தலை தான் தைரியமாக சந்திக்கவுள்ளதாகவும் மக்களைப் பொருத்தவரை தன்னைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை என்றும் அவர்களுக்கு செல்லப் பிள்ளையான தன்னை வெற்றி பெற வைப்பார்கள் என்றும் கூறும் பவர் ஸ்டார், மக்களை நம்பி காந்தி வழியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.