உத்தம வில்லன் படத்தில் கமலஹாசன், நிறைய வித்தியாசமான கெட்டப்களில் தோன்றுகிறார். சினிமாவை பற்றிய கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. கமல் நடிகர் கேரக்டரில் வருகிறார். அரசர் வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வருகிறார். இதில் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங், ரிரீகார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமல் நடித்து முடித்துள்ளார். பாபநாசம் படமும் முடிந்துள்ளது. இது மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடியது. ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் ஆகும். மூன்று படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வர இருக்கின்றன. முதலில் உத்தம வில்லன் படம் வருகிறது.
மனோரமாவிடம் கோடி கோடியாய் சொத்து – கவனிக்க யாரும் இல்லை
19-11-201
மனோரமா தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக இருந்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்து நடித்து வருகிறார். தற்போதைய இளம் நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ளார்.
மனோரமாவுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். மூட்டு வலி ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினார்.
தற்போது மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் வீட்டிலேயே போட்டு வைத்துள்ளனர் என்று மன்சூர்அலிகான் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:–
என் மகள் திருமணத்துக்காக மனோரமாவுக்கு அழைப்பிதழ் வைக்க அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அப்போது அவர் இருந்த நிலைமையை பார்த்து கலங்கிப் போனேன். முகம் வீங்கி இருந்தது. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தார்.
அடிக்கடி ‘டயாலிசஸ்’ செய்ய வேண்டும். அதை கூட செய்யவில்லை. சிறநீரக மாற்று ஆபரேஷன் செய்தால் அவர் இன்னும் நீண்ட நாள் உடல் நலத்தோடு இருப்பார். அதையும் செய்யவில்லை. ஆஸ்பத்திரியிலும் சேர்க்க வில்லை.
மனோரமா நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வைத்துள்ளார். சென்னையிலேயே நூற்றுக்கணக்கான கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. அப்படிப்பட்டவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வைத்து இருப்பது வருத்தமாக இருக்கிறது.
ஒட்டு மொத்த திரையுலகினருக்கும் மனோரமா மேல் பாசம் இருக்கிறது. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்திட ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.
Kamal Haasan Launches Ten Kings Book
Vanmham – Paadatta Paadatta Video