காலிக்கும் மாத்தறைக்குமிடையிலான அதிவேக நெடுஞ்சாலை 30 கிலோ மீற்றர் நீளமுடைய 4 வழிப் பாதை கொண்டது. இந்த அதிவேக நெடுஞ்சாலையினூடாக மணிக்கு 100 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்க முடியும்.
பின்னதுவ இமடுவ கொக்மடுவ மற்றும் கொடகம ஆகிய பிரதேசங்களில் நுழைவாயிலைக் கொண்டுள்ள இந்நெடுஞ்சாலை 178 மீற்றர் நீளமான பாலத்தையும் கொண்டுள்ளது.
கொட்டாவை முதல் கொடகமை வரையிலான தூரத்தை ஒரு மணி 20 நிமிடத்தில் பயணிக்க முடியுமென அமைச்சு குறிப்பிடுகிறது. இத்தூரத்தை சாதாரண பாதையினூடாக சென்றடைவதற்கு 4 மணித்தியாலம் எடுக்குமென சுட்டிக்காட்டும் அமைச்சு அம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலை விஸ்தரிப்பு நடவடிக்கைகள் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மேலும் அமைச்சு குறிப்பிடுகிறது.