சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றில் கட்டப்பட்டுள்ள ஆடம்பர நீச்சல் குளம் தற்போது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது.
மத்திய சுவிஸில் உள்ள லூசெர்ன் ஏரிக்கு அருகில் Villa Honegg என்ற ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஹொட்டலில் உலகத்தில் வேறெங்கும் இல்லாத வகையில் ஒரு ஆடம்பர நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அதாவது, ஹொட்டலின் மேல்தளத்தில் அமைந்துள்ள இந்த நீச்சல் குளத்திற்குள் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படிக்கட்டு வழியாக உள்ளே சென்றால், நீச்சல் குளத்தின் மறுப்பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.
பின்னர், அங்கிருந்து குளித்துக்கொண்டு மலைகள் சுற்றிய இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் அளவிற்கு இந்த நீச்சல் குளம் அமைந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹொட்டலுக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இந்த நீச்சல் குளத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது வரை இந்த வீடியோவை உலக முழுவதிலும் இருந்து சுமார் 120 மில்லியன் நபர்களுக்கு மேல் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல், இந்த நீச்சல் குளத்தை பற்றி விசாரணை செய்தும், இந்த ஹொட்டலுக்கு சென்று சாப்பிட தினமும் 300க்கும் அதிகமான மின்னஞ்சல்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.
நீங்களும் இந்த ஹொட்டலுக்கு செல்ல வேண்டுமானால் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
ஏனெனில், 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த ஹொட்டலில் அனைத்து விதமான சேவைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய படங்களை பார்வைிட இங்கே அழுத்தவும்