வேலையில்லா பட்டதாரி படத்தில் டப்பிங் வொய்ஸ் பண்ணியபோது தனுஷுடன் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் என்னுடைய ஆசையை அவரிடம் சொல்லவில்லை. நல்ல நேரம் அமைந்தால் அவருடன் நடிக்கும் என் ஆசை நிறைவேறும்!
குரலில் குயிலாகவும் அழகில் மயிலாகவும் இதயம் அள்ளுகிறார் ரவீணா.
நடிகை கள் சமந்தா, ஸ்ரீதிவ்யா, எமிஜாக்ஸனின் உத ட்டசைவு உச்சரிப்புகளுக்கு உயிர் கொடுத்துவரும் பின்னணிக்குரல் ரவீணாவுக்கு டப்பிங் உலகில் செமவொய்ஸ் பிஸியாக இருந்தவரின் நேரம் பிடுங்கிப் பேசிய போது, தமிழ், மலையாளம் என்று பல மொழிகளிலும் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து வந்த ஸ்ரீஜாரவியோட பொண்ணுதான் நான்.
அவரோட திறமைதான் எனக்குள்ளும் ஒட்டிக்கிச்சு. எனக்கு ஒன்றரை வயசா இருக்கும்போது தொட்டா சிணுங்கி படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேசுவதற்காகப் போனபோது அம்மா என்னையும் தூக்கிட் டுப் போனாங்க.
அப்போ தொட்டாசிணுங்கி தொட்டாச்சிணுங்கி என்று படத்தோட டைட்டிலை அடி க்கடி சொல்லிக்கிட்டே இருந்தேன். டைர க்டர் கே.எஸ். அதியமான் இதை கவனிச்சிட்டு ரேடியோ விளம்பரத்துக்காக என்னோடவொய்ஸைப் பயன்படுத்திகிட்டாங்க. ஆகவே, அந்த வயசிலேயே என க்கு டப்பிங் கார்ட் எடுத்திட்டாங்க.
அப்புறம் நிறைய விளம்பரங்களில் குழந்தைகளுக்கு குரல் கொடுத்திருக்கேன். சாட்டை படத்திலிருந்து தான் ஹீரோயின்களுக்கு குரல் கொடுக்க ஆரம்பிச் சேன். இப்போ தமிழ், மலையாள, இந்தின்னு பிஸியா இருக் கேன்.
எந்த ஹீரோயினுக்கு உங்கவொய்ஸ் செட் ஆகுது?
ஒவ்வொருத்தருக்கும் வேற வேற மொடுலேஷன்ல பேசுகிறேன். நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலுக்கு பேசியபோது அவங்களோட மேனரிசத்துக்கு ஏற்ற மாதிரிவொய்ஸை மாற்ற லேசா சிரமப்பட வேண்டியிருந்தது.
சிகரம் தொடு படத்தில் மோனல் கஜ்ஜார், ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யா, 555 படத்தில் இரண்டு கேரக்டர்கள், ஒரு மலையாளப்படத்தில் காஜல் அகர்வாலுக்கு நிறையப் பேசிட்டேன்.
லேட்டஸ்டா கத்தியில் சமந்தாவுக்கு பேசியபோது அவர்களுக்கு என் குரல் சூப்பரா செட் ஆனது. தனுஷின் அநேகன் ஹீரோயினுக்கும் ஐ படத்தில் எமிஜாக்ஸனுக்கும் டப்பிங் பண்ணியிருக்கேன்.
டப்பிங்கில் இலட்சியம் ஏதாவது இரு க்கா?
ஷங்கர் படம் வரைக்கும் வந்திட்டேன். அடுத்து மணிரத்னம் படத்தில் வேர்க் பண்ணனும் என்று ஆசை இருக்கு. அப்புறம் என்னோட பாட்டிக்கு அம்மாவை ஹீரோயினாக்கும் ஆசை இருந்துச்சு.
ஆனால், அது நிறைவேறல. இப்போ எனக்குள்ள அந்த ஆசை இருக்கு. ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரத்தில் எக்ஸாம் இருந்ததால் நடிக்க மறுத்திட்டேன்.
எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கணும் என்று நினைக்கிறீங்க?
நான் தனுஷ் பைத்தியம். அவர்கூட ஒரு படத்திலாவது நடிச்சிடனும் என்று ஆசை இருக்கு. வேலையில்லா பட்டதாரியில் டப்பிங் பண்ணினபோது அவருடன் பேசச் சந்தர்ப்பம் கிடைச்சது.
ஆனால் என்னோட ஆசையை அவர்கிட்ட சொல்லலை. நேரம் அமைந்து வந்தால் அவர் ஜோடியாக நடிக்கும் ஆசை நிறைவேறிடும் என்று நம் புகின்றேன் என்றார் ரவீணா.