பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் முத்தமிட்டு வரவேற்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியுள்ளது.
பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், இந்தியா, அவுஸ்திரேலியா, சிலி, புர்கினோ பெஸோ, எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இம்மாநாட்டில் பங்குபற்றியவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டாக புகைப்படம் பிடித்துக்கொண்டனர்.
அப்போது தலைவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகொடுத்தும் முத்தமிட்டும் வரவேற்றுக்கொண்டனர்.
அப்போது, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அமெரிக்க முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப் முத்தமிட்டபோது அவரின் முகபாவனை பலரின் கவனத்தை ஈர்த்தது.
ட்ரூடோவை மெலனியா கிறக்கமாக பார்வையிடுவதையும் ஜனாதிபதி ட்ரம்ப் கீழ்நோக்கிய பார்வையும் பலரின் பேசுபொருளாகின.
உண்மையில் ஜனாதிபதி ட்ரம்புடன் கரம்கோர்த்தவாறு பிரதமர் ட்ரூடோவுடன் மெலனியா முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஜஸ்டின் ட்ரூடோவை மெலனியா பார்க்கும் விதத்தில் உங்களை பார்ப்பதற்கு ஒருவரை தேடிக்கொள்ளுங்கள், கனடாவுக்கு தப்பிச்செல்வதற்கு மெலனியா எண்ணுகிறார் போலும் என்றெல்லாம் டுவிட்டரில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
(படங்கள்: ரோய்ட்ர்ஸ், ஏ.எவ்.பி)
வீடியோ: