தலயின் உடல் எடையை குறைப்பதற்கு பொலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி அஜீத் வீட்டிலேயே தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார்.
வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான்.
இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் விஷயத்தில் பொலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர்.
அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சினை இருப்பதால், கண்டபடி எடை தூக்கவும் முடியாது. இதனால் முறையான பயிற்சியாளரை தேடி வருகிறாராம் அஜித்.
இந்த விஷயத்தை அறிந்த பொலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த பயிற்சியாளர் அஜீத் வீட்டிலேயே தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார்.
கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் 6 பேக்ஸ் அல்லது 8 பேக்ஸ்ஸை காண ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.
முதலில் விஜய், இப்போ அஜீத், சூர்யா: இது ‘இரட்டையர்’ சீசன்
22-03-2014
22-03-2014
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் 3 பேர் சொல்லி வைத்தது போன்று ஒரே நேரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள். கோலிவுட்டில் இது இரட்டை வேடங்கள் சீசன் போன்று. முன்னணி ஹீரோக்கள் மூன்று பேர் தங்களின் புதிய படங்களில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்கள். அது யார், யார் என்று பார்ப்போம்.
விஜய்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.
அஜீத்
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரம் நல்லவனாகவும், மற்றொரு கதாபாத்திரம் கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சூர்யா
சூர்யா லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் ஸ்டைலான இரண்டு வேடங்களில் வருகிறார் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
சூர்யா லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் ஸ்டைலான இரண்டு வேடங்களில் வருகிறார் என்று லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
சமந்தா
விஜய் மற்றும் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களின் நாயகி சமந்தா. இந்நிலையில் அஜீத் ஜோடியாக கௌதம் மேனன் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது.
விஜய் மற்றும் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் படங்களின் நாயகி சமந்தா. இந்நிலையில் அஜீத் ஜோடியாக கௌதம் மேனன் படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது.