மின்னல் மனிதர் என வர்ணிக்கப்படும் கறுப்புச் சிங்கம் உசேன் போல்ட, ஹீரோ ஹொண்டா நிறுவனத்தினரின் புதிய தயாரிப்பான ஹோண்டா சி.ஆர்.வி. ரக கார் ஒன்றை வாங்கி தனது தாய்க்கு பரிசளித்துள்ளார்.
வெறும் ஒன்பதே விநாடிகளில் சாதாரண ஒரு மனிதரால் எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியும். மிஞ்சிப் போனால் ஒரு கைப்பேசியிலிருந்து இன்னொரு கைப்பேசிக்கு அழைப்பொன்றை மேற்கொள்ளலாம்.
ஆனால் மின்னல் மனிதர் என வர்ணிக்கப்படும் கறுப்புச் சிங்கம் உசேன் போல்ட 100 மீற்றர் ஓட்டப் பந்யைத்தை 9.58 விநாடிகளில் இலகுவாகக் கடக்கும் ஆற்றல் கொண்டவர்.
அதேபோன்று 200 மீற்றர் ஓட்டப்போட்டியை 19.19 விநாடிகளில் ஓடிக்கடக்கும் ஆற்றல் கொண்ட இவருக்கு நிகர் இவரே. ஓட்டத்தை எவ்வளவு நேசிக்கின்றாரோ அதைவிட பன்மடங்குதனது தாயை நேசிப்பதாக கூறும் உசேன் போல்ட்,
ஹீரோ ஹொண்டா நிறுவனத்தினரின் புதிய தயாரிப்பான ஹோண்டா சி.ஆர்.வி. ரக கார் ஒன்றை வாங்கி தனது தாய்க்கு பரிசளித்துள்ளாராம்.
Usain Bolt
இவர் அது பற்றி கூறுகையில்: ‘‘எனது தொடர் வெற்றிகளின் அதிகபட்ச மகிழ்ச்சி – என் தாயை நினைவுகூர்வதுதான். அன்பினால் மட்டுமே உருவான என் அம்மாவுக்கு இந்தப் பரிசு சாதாரணம்தான்.
என் இறுதி மூச்சு உள்ளவரை அவரைக் காதலிக்கிறேன்!” என தனது முகநூல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் போல்ட்.