நடிகைகள் சரிதா, விஜி குடும்பத்திலிருந்து மேலும் ஒரு நாயகி வெள்ளித்திரையில் கால் பதிக்கவுள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரிதா. இவரின் சகோதரி விஜியும் நடிகைதான் ‘ஆரோகணம்’ உள்ளிட்ட பல படங்களில் விஜி தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சரிதா, விஜி வழியில் விஜி-சந்திரசேகர் தம்பதியின் மகள் லவ்லினும் நடிப்புலகில் பிரவேசிக்கவிருக்கிறார். லவ்லினின் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் லவ்லின் மும்பையில் இருக்கும் அனுபம் கேர் பள்ளியில் நடிப்பு கலையை முறையாக பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகர் – நடிகை விஜி தம்பதியின் மகளான லவ்லின் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
நடிகை சரிதாவின் சகோதரியான விஜி, தில்லுமுல்லு படத்தில் நடித்தவர்.
லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில் நடிப்புக் கலையைப் பயின்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
லவ்லின் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் உள்ளிட்ட இதர தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.