நாமல் ராஜபக்ச மற்றும் திலங்க சுமதிபால இருவரின் ஏற்பாட்டில் கொழும்பு கெம்பல் மைதானம் , ராஜகிரியவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் பொலிவூட் சினிமா நட்சத்திரங்களான சல்மான்கான் மற்றும் ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் கலந்து கொண்டு விசேட தேவைக்குரியோருக்கான உபகரணங்கள் வழங்கியதுடன் அங்கு வந்திருந்த மக்களை சந்தித்தனர்.
நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.
பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.