நாட்டில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 182 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 166 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 226ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 652 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 20 ஆயிரத்து 90 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து ஆறு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது.