கடல் படம் எனக்கு கிடைச்ச மிகப் பெரிய கிஃப்ட். முதல் படத்திலேயே மணிரத்னம் சாரோட டைரக் ஷன்ல நடிக்கிற துக் குக் கொடுத்துவெச்சிருக்கணும். மணி சார் என்னை ‘டீ’னு நிக்நேம் சொல்லிக் கூப் பிடுறது ரொம்பப் பிடிக்கும்.
இப்போ ‘யான்’ல நடிச்சிருக்ருக்கேன். எனக்கு ஸ்கூல் எக்ஸாம் நடக்கிறதால, கொஞ்ச நாளைக்கு படிப்பு மட்டும்தான்” மழலை மாறாமல் பேசுகிறார் துளசி.
” ‘அக்காவோட நடிச்சதுக்கும், என்கூட நடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்?’னு ஜீவாகிட்ட கேட்டீங்களா?”
”கேட்காம இருப்பேனா? ‘அக்கா ரொம்ப போல்டா, தைரியமா இருப்பாங்க. நீ கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் கேலினு பச்சைக் குழந்தையா இருக்கே’னு கமென்ட் பண்ணார்.
‘ஷூட்டிங்ல டேக் போகும்போது பாருங்க, சீரியஸ் ஆயிடுவேன்’னு சொன்னதோட, ஒரே டேக்ல ஓகே வாங்கி அசத்தியிருக்கேன்.”
”அக்கா கார்த்திகாவும் நடிகை, நீங்களும் நடிகை… உங்களுக்குள்ளே போட்டி வரலை யா?”
”வயசுல மட்டுமில்ல, நடிப்புலேயும் கார்த்திகா என்னோட குரு, ரோல்மொடல், இன்ஸ்பிரேஷன் எல்லாமே. அவளோட வளர்ச்சி, தங்கச்சியான எனக்கு ரொம்ப சந்தோஷம். ஷூட்டிங் இல்லாத சமயத்துல ஏ டு இஸட் சினிமா விஷயங்களை அலசுவோம்.”
”டீன் ஏஜ் பொண்ணுக்கு லவ் வராம இருந்திருக்காதே?”
”(சத்தமாகச் சிரிக்கிறார்) எல்லாருக்குமே கையில ராக்கி கட்டிவிட்டு ‘அண்ணா’னு சொல்லிடுவேன். ‘நல்லா படிக் கணும், கல்யாண வயசு வந்ததும் நாயர் பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்க ணும், அதுவும் அரேஞ்ச்ட் மேரேஜா தான் இருக்கணும்’னு மனசுல தீர்மானிச்சு வெச் சுட்டேன்.”
ஸ்லிம் சுனைனா
‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தவர் நடிகை சுனைனா. அதன் பிறகு ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’, ‘பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம்’, ‘திருத்தணி’, ‘நீர்ப்பறவை’, ‘சமர்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார்.
ஆனால், இதில் ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’ படங்கள் மட்டுமே கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படி அமைந்தன. இருந்தாலும் மனம் தளராத சுனைனா தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான படங்களைத் தேர்வு செய்வு நடித்து வருகிறார். அதோடு தன் பெயரையும் ‘அனுஷா’ என சமீபத்தில் மாற்றிக் கொண்டார்.
தற்போது ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியாக நடித்துள்ள ‘நம்பியார்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர விஜய் சேதுபதி, கிருஷ்ணா நடிக்கும் ‘வன்மம்’ படத்திலும் அனுஷாதான் நாயகி.
இப்படத்திற்காக தன் உடல் எடையை இன்னும் கொஞ்சம் குறைத்து ‘ஸ்லிம்’மாக மாறியிருக்கிறார். இந்த புதிய ‘ஸ்லிம்’ அவதாரத்தை பார்த்தவர்களெல்லாம் பாராட்டு மழையால் அனுஷாவை நனைய வைக்கிறார்களாம்.
‘வன்மம்’ படம் ரிலீஸிற்குப் பிறகு தன் கேரியரில் நிச்சயம் பெரிய மாற்றம் வரும் என பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சுனைனா என்ற அனுஷா.