ஸ்பெயின் நாட்டில் பாரசிலோனா நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானியின் சாதுர்யத்தால் இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. நூலிழையில் தப்பித்த இந்த விமானங்களை Miguel Angel என்பவர் நேரடியாக வீடியோ எடுத்து யூடியூப் இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் உள்ள El Prat Airport என்ற விமான நிலையத்தில் ரஷ்யாவில் இருந்த போயிங் 767 என்ற விமானம் ரன்வேயில் தரையிறங்க தயாரானது.
இந்த நேரத்தில் ரன்வேயின் குறுக்கே Aerolineas Argentinas Airbus A340 என்ற விமானம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரஷ்ய விமானத்தின் விமானி எச்சரிக்கைப்பட்டதும், விமானி சுதாரித்து விமானத்தை மீண்டும் மேலே செலுத்தினார்.
ஒருசில வினாடி தாமதம் ஆகியிருந்தாலும் இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விமான விபத்து ஏற்பட்டிருக்கும்.
இதயமே நின்றுவிடக்கூடிய இந்த அதிர்ச்சி காட்சியை அந்த விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த Miguel Angel என்பவர் தனது மொபைல் போனில் இருந்து வீடியோ எடுத்து உடனடியாக யூடியூப் இணையதளத்தில் அப்லோடு செய்தார்.
இந்த வீடியோ இரண்டே நாட்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.