12 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று இடம்பெற்ற 25 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி இறுதிப் பந்தில் விளாசிய ஆறு ஓட்டத்தின் மூலமாக திரில் வெற்றி பெற்றது.
இப் போட்டியின் இறுதி ஓவரில் 18 ஓட்டங்கள் என்ற நிலையிலிருக்க ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் பென்ஸ்டோக்ஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டபோது அந்த ஓவரை ஜடேஜா, தோனி, சாண்டனர் ஆகியோர் எதிர்கொண்டனர்.
இதன்போது மைதானத்தில் பல சுவாரஷ்ய சம்பவங்களும், திரில்லிங்கான சம்பவங்களும் இடம்பெற்றன.
* ஜடேஜாவின் அற்புதமான சிக்ஸர்
* இரண்டாவது பந்து நோ போல்
* தோனியின் ஆட்டமிழப்பு
* தோனியின் கேப்டன் கூல் தகுதி கேள்விக்குறி
* சாண்டனரின் திரில்லிங் சிக்ஸர் ஆகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.