பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி போலவே சிணுங்கி கொண்டு நடிக்கும் அவரது நடிப்பும் ரசிக்கும் வகையில் உள்ளது.
இந்த வாரம் யாராவது லாஸ்லியாவை வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் என்று கூற முடியாது. சாண்டி வழக்கம்போல் கஸ்தூரியை சத்துணவு ஆயா என்று கலாய்க்கின்றார். டாஸ்க் என்பதால் சாண்டி கலாய்ப்பதை கஸ்தூரி பொறுத்துதான் ஆக வேண்டும்.
கவின், ஷெரின், தர்ஷன் ஆகியோர் வழக்கம்போல் டாஸ்க்காக இருந்தாலும் அதிலும் ரொமான்ஸை கலக்குகின்றனர்.
வனிதாவுக்கு மாணவி வேடம் கொடூரமாக உள்ளது. இதையெல்லாம் பார்க்க பார்வையாளர்களுக்கு மிகுந்த மனதைரியம் வேண்டும். மொத்ததில் இந்த வார டாஸ்க் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும்போல் தெரிகிறது.